பொது இடங்களில் கால்நடைகளை வெட்ட தடை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

பொது இடங்களில் கால்நடைகளை வெட்ட தடை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
Updated on
1 min read

புதுடெல்லி: பொது இடங்​களில் கால்​நடைகளை வெட்ட உயர் நீதிமன்​றம் விதித்த தடைக்கு எதி​ராக உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழ்நாடு அரசு மேல்​முறை​யீடு செய்​துள்​ளது.

இந்து மக்​கள் கட்​சி​யின் இளைஞரணி செய​லா​ள​ரான கோவை, செல்​வபுரத்தைச் சேர்ந்த சூர்ய பிர​சாந்த், சென்னை உயர் நீதிமன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், ‘‘பக்​ரீத் பண்​டிகையை முன்னிட்டு கோவை துடியலூர் சந்​தை, உக்​கடம், ரத்​தினபுரி மசூ​தி போன்ற பல்வேறு இடங்​களில் மாடு​கள் வெட்டப்​பட​ உள்​ளன.

அனு​ம​திக்​கப்​பட்ட இடங்களைத் தாண்டி பொது இடங்களில் மாடு​களை வெட்​டக் கூடாது என்​றும், மாடு​களை வெட்​டும் முன்​பாக அவை முழு​மை​யான மருத்​துவ பரிசோதனைக்கு உட்படுத்​தப்​பட்​டதா என்​றும், கன்​றுக்குட்​டிகள் வெட்​டப்​படு​கின்றனவா என்​றும் சோதிக்க அதிகாரி​களுக்கு உத்​தர​விட வேண்டும்” என கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கை சென்னை உயர்​நீ​தி​மன்ற நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், வி.லட்​சுமி நாராயணன் அடங்​கிய அமர்வு கடந்த மே 27-ம் தேதி விசா​ரித்​தது. ஏற்​கெனவே சென்னை உயர் நீதி​மன்​றம் கடந்த 2020-ம் ஆண்டு பொது இடங்​களில் மாடு​களை வெட்​டக் கூடாது எனத் தடை விதித்துள்​ளது. 1976-ல் தமிழக அரசும் பசுவதையை தடை செய்து அரசாணை பிறப்பித்​துள்​ளது.

அனு​ம​திக்​கப்​பட்ட இடம் தவிர...

எனவே, தமிழகம் முழு​வதும் பக்​ரீத் பண்​டிகை மட்​டுமல்​லாது மற்ற நாட்​களி​லும் அனு​ம​திக்கப்​பட்ட இடங்​களைத் தவிர்த்​து பொது இடங்​களில் எந்தவொரு விலங்​கினங்களை​யும் வெட்​டக்​கூ​டாது. அவ்​வாறு பொது இடங்​களில் மாடு​கள் வெட்​டப்​பட​வில்லை என்​பதை தமிழக அரசின் தலை​மைச் செயலரும், சட்​டம்​- ஒழுங்கு கூடு​தல் டிஜிபி-​யும் உறுதி செய்ய உத்​தர​விட்​டனர்.

இந்த உத்​தரவை எதிர்த்து தமிழ்​நாடு அரசின் சார்​பில் வழக்கறிஞர் ஜெய் நரசிம்​மன் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீட்டு மனு தாக்​கல் செய்​துள்​ளார். அதில், மனு​தா​ரர் கோராத கோரிக்​கை​யைத் தமிழ்​நாடு முழுவதும் பொது இடங்​களில் மாடுகளை வெட்​டு​வதற்​கான தடையை சென்னை உயர் ​நீ​தி​மன்​றம் பிறப்பித்​துள்​ளது. மனு​தா​ரர் எழுப்​பாத பிரச்சினை​களை​யும் உயர் நீதி​மன்​றம் விவாதித்​துள்​ளது.

தமிழ்​நாடு விலங்​கு​கள் பாதுகாப்பு சட்​டம், தமிழ்​நாடு நகர்​புற உள்​ளாட்​சிகள் சட்​டம் விலங்குகளை பலி​யிடு​வதை முறைப்படுத்​து​வதற்​காக உரு​வாக்​கப்பட்​டதே தவிர தடை செய்​வதற்காக உரு​வாக்​கப்​பட​வில்லை.

எனவே சென்னை உயர்​நீ​தி​மன்றம் பிறப்​பித்த உத்​தர​வுக்​குத் தடை விதிக்க வேண்​டும் என்று கோரப்​பட்​டுள்​ளது. இதனிடையே இந்த விவகாரத்​தில் தமிழ்​நாடு அரசு மனு தாக்​கல் செய்​யும்​போது தனது தரப்பு கருத்​தை​யும் கேட்​கக் கோரி சூரிய பிர​சாந்த் சார்​பில்​ பிவி யோகேஸ்​வரன்​ கேவியட்​ மனு தாக்​கல்​ செய்​துள்​ளார்.

பொது இடங்களில் கால்நடைகளை வெட்ட தடை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
​டாஸ்​மாக் உடன் இணைந்த பார்களை மூடு​மாறு உத்​தரவு: உரிமை​யாளர்​கள் எதிர்ப்​பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in