திருச்செந்தூர் கோயில் நிகழ்ச்சிகளில் தனி மனிதத் துதி பாடத் தடை

திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோயில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

Updated on: 
1 min read

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவில், நவம்பர் 15-ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற்றது. அன்று கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பக்தி இன்னிசை நிகழ்ச்சியில், பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமி, வேல்முருகன் ஆகியோர் எழுப்பிய சில கோஷ வாக்கியங்கள் பொதுவெளியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து அமைப்புகள் சார்பில் காவல்துறையில் மனுக்கள் அளிக்கப்பட்டன. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்செந்தூர் கோயிலில் நடைபெறும் ஆன்மிக நிகழ்ச்சிகளில் தனிநபர் துதி பாடத் தடை விதித்து கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியின் போது, பக்தி இன்னிசை நிகழ்ச்சியில், பாடகர்கள் எழுப்பிய சில கோஷ வாக்கியங்கள், பொதுவெளியில் ஏற்படுத்திய விமர்சனங்கள் கோயிலின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துவிட்டது.

எனவே, இனிவரும் காலங்களில் கோயிலால் ஒழுங்கு செய்யப்படும் ஆன்மிக நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைஞர்கள் இறைபக்தி வசனங்கள் மற்றும் இறைபக்திப் பாடல்களைத் தவிர, ஆன்மிகத்துக்குத் தொடர்பில்லாத எந்தவொரு கோஷத்தையோ, தனிமனிதத் துதிப் பாடல்களையோ கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோயில்</p></div>
திருப்​பரங்​குன்​றம் தீபத்​தூண் விவகாரம்: உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்​கல்

X