செயற்கை சுவையூட்டி சேர்க்கப்பட்ட​ 11 வகை மது விற்பனைக்கான தடை 24 மணி நேரத்தில் வாபஸ்

செயற்கை சுவையூட்டி சேர்க்கப்பட்ட​ 11 வகை மது விற்பனைக்கான தடை 24 மணி நேரத்தில் வாபஸ்
Updated on
1 min read

சென்னை: செயற்கை சுவையூட்​டும் பொருட்​கள் சேர்க்​கப்​பட்​ட​தால் 11 வகை மது​பானங்​களின் விற்​பனைக்கு தடை விதிக்​கப்​பட்ட நிலை​யில் தற்​போது அந்த தடை திடீரென நீக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​திய உணவுப் பாது​காப்பு மற்​றும் தர நிர்ணய ஆணை​யம்​ (எஃப்​எஸ்​எஸ்​ஏஐ) கடந்த ஆக.11-ம் தேதி திரு​வள்​ளூர் மாவட்​டம் பூந்​தமல்​லி​யில் செயல்​படும் என்​ரிகா எண்​டர்​பிரைசஸ் மது​பான ஆலை​யில் சோதனை நடத்​தி​யது.

இந்த சோதனை​யில் செயற்கை சுவையூட்​டும் பொருட்​கள் சேர்க்​கப்​பட்​டிருப்​ப​தாக கூறி வி.எஸ்​.ஓ.பிஎக்ஸா கோல்ட் பிராந்​தி, லூயிஸ் வெர்​னான்ட் எக்​ஸ்ஓ பிளண்​டட் பிரீமி​யம் பிராந்​தி, மெக் டவல்ஸ் வி.எஸ்​.ஓ.பி பிராந்​தி, நம்​பர் 1 மெக் டவல்ஸ் ஃபைன் பிராந்​தி, மேன்ஸ் கிளப் டீலக்ஸ் பிராந்​தி, ஹனி பீ ஃபைன் பிராந்​தி, என்​ரிகா வி.எஸ்​.ஓ.பி செலெக்ட் பிராந்​தி, என்​ரிகா பிளாட்​டினம் ரிசர்வ் எக்​ஸ்.ஓ பிராந்​தி, என்​ரிகா பிரீமி​யம் பிரெஞ்ச் பிராந்​தி, வீரன் ஸ்பெஷல் பிராந்​தி, என்​ரிகா ஓல்ட் இண்டி கிளாசிக் டார்க் ரம் ஆகிய 11 மது பானங்​களின் விற்​பனையைத் தடை செய்ய எஃப்​எஸ்​எஸ்ஏஐ உத்​தரவு பிறப்​பித்​தது.

இதையடுத்து கடந்த 13-ம் தேதி 11 வகை மது​பானங்​கள் விற்​பனைக்கு டாஸ்​மாக் நிர்​வாகம் தடை விதித்​தது. இந்​நிலை​யில் நேற்று முன்​தினம்​ (14-ம் தேதி) எஃப்​எஸ்​எஸ்ஏஐ மது​விலக்கு ஆணை​யருக்கு அனுப்​பிய கடிதத்​தில், உணவு பாது​காப்பு மற்​றும் தரம் சட்​டம் 2006-ன் பிரிவு 36(3)பி-ன்​படி தடை உத்​தரவு திரும்​பப்​பெறப்​படு​வ​தாகத் தெரி​வித்​துள்​ளது. இதையடுத்து டாஸ்​மாக் நிர்​வாகம் 11 வகை மது​பானங்​கள் விற்​பனைக்​கான தடையை நீக்கி​யுள்​ளது.

செயற்கை சுவையூட்டி சேர்க்கப்பட்ட​ 11 வகை மது விற்பனைக்கான தடை 24 மணி நேரத்தில் வாபஸ்
ஊழலற்ற தமிழகம் உருவாவதே முழு சுதந்திரம்: சுதந்திர தின உரையில் முதல்வர் விஜய் உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in