வடபழனி முருகன் கோயிலில் உள்ள வள்ளி திருமண மண்டபத்தை புதுப்பிக்கும் பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

வடபழனி முருகன் கோயிலில் உள்ள வள்ளி திருமண மண்டபத்தை புதுப்பிக்கும் பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு
Updated on
1 min read

சென்னை: வடபழனி முரு​கன் கோயி​லில் உள்ள வள்ளி திருமண மண்​டபத்தை புதுப்​பி்க்​கும் பணி​களுக்கு விதிக்​கப்​பட்ட தடையை நீ்ட்​டித்​து, உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கோயில் உபரி நிதி​யைக் கொண்டு திருமண மண்​டபங்​கள் கட்​டவோ அல்​லது புதுப்​பிக்​கும் பணி​களை மேற்​கொள்​ளவோ கூடாது என சென்னை உயர் நீதி​மன்​றம் கடந்​தாண்டு ஆக.19 அன்று உத்​தர​விட்​டது. இந்த உத்​தரவை எதிர்த்​து, அரசு தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் கடந்​தாண்டு ஏப்​ரல் முதல் வடபழனி முரு​கன் கோயி​லில் உள்ள வள்ளி திருமண மண்​டபத்தை புதுப்​பித்​தல், புதி​தாக ஜெனரேட்​டர் அமைத்​தல், அறநிலை​யத் துறை துணை ஆணை​யர் அலு​வல​கத்தை சீரமைத்​தல் என ரூ. 8.72 கோடிக்​கான ஒப்​பந்​தப் பணி​களை அறநிலை​யத் துறை மேற்​கொண்டு வரு​வ​தால் இப்​பணி​களுக்கு தடை விதிக்க வேண்​டும் எனக் கூறி, தேவா என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கை ஏற்​க​னவே விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், இதுதொடர்​பாக, இந்து சமய அறநிலை​யத் துறை பதிலளிக்க உத்​தர​விட்டு கட்​டு​மானப் பணி​களை தொடரக்​கூ​டாது என இடைக்​காலத் தடை விதித்​திருந்​தது.

இந்​நிலை​யில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்​.ஏ. தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, அறநிலை​யத் துறை தரப்​பில் பதிலளிக்க அவகாசம் கோரப்​பட்​டது.

அதையடுத்​து, இதுதொடர்​பாக, இரு வாரங்​களில் பதிலளிக்க வேண்​டுமென அறநிலை​யத்​துறைக்​கு, நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர்.

அது​வரை, வடபழனி முரு​கன் கோயி​லில் நடை​பெறும் கட்​டு​மானப் பணி​களுக்கு விதிக்​கப்​பட்ட தடையை நீட்​டித்​தும், தற்​போதைய நிலையே தொடர வேண்​டும் என்​றும் உத்​தர​விட்​டு, வி​சா​ரணை​யை தள்​ளி வைத்​தனர்​.

வடபழனி முருகன் கோயிலில் உள்ள வள்ளி திருமண மண்டபத்தை புதுப்பிக்கும் பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு
சென்னை | இளம் பெண்களிடம் தவறாக நடந்த 3 பேரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in