சென்னை: பழமையான கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்து 8 வாகனங்கள் சேதம்

சென்னை: பழமையான கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்து 8 வாகனங்கள் சேதம்
Updated on
1 min read

சென்னை: சென்னை பட்​டினப்​பாக்​கத்​தைச் சேர்ந்​தவர் தாமஸ். இவருக்கு ஏழுகிணறு குட்டி மேஸ்​திரி தெரு​வில் 2 கட்​டிடங்​கள் உள்​ளன. இதில், சுமார் 40 ஆண்​டு​கள் பழமை​யான ஒரு கட்​டிடத்​தின் தரைத்​தளத்​தில் 4 கடைகளும், முதல் தளத்​தில் 4 வீடு​களும் உள்​ளன.

இந்​நிலை​யில், நேற்று அதி​காலை அந்த கட்​டிடத்​தின் முதல் தளத்​தில் உள்ள பால்​கனி திடீரென இடிந்து சாலை​யில் விழுந்​தது. அப்​போது அந்த பகு​தி​யில் கீழே நிறுத்தி வைக்​கப்​பட்​டிருந்த ஒரு ஆட்டோ மற்​றும் 7 இருசக்கர வாக​னங்​கள் மீது கட்​டிட இடி​பாடு​கள் விழுந்​தன.

இதில் 8 வாக​னங்​களும் சேதமடைந்​தன. தகவல் அறிந்த ஏழுகிணறு போலீ​ஸார் உடனடி​யாகச் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்​றனர். பின்​னர் கட்​டிட இடி​பாடு​களை அகற்​றி, சேதமடைந்த வாக​னங்​களை அங்​கிருந்து மீட்​டனர்.

இந்த சம்​பவத்​தில் அதிர்​ஷ்ட​வச​மாக யாருக்​கும் காயம் ஏற்​பட​வில்​லை. வாக​னங்​கள் சேதடைந்​ததையடுத்​து, அதன் உரிமை​யாளர்​கள் அளித்த புகாரின் பேரில் ஏழுகிணறு போலீ​ஸார் வழக்​குப் பதிந்து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

சென்னை: பழமையான கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்து 8 வாகனங்கள் சேதம்
பிரதமரிடம் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு: ‘விக்சித் பாரத்’ உரையாடலில் பங்கேற்க செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in