கோவையில் மோசமான வானிலையால் அமைச்சர் வன்னியரசு வந்த விமானம் மதுரையில் தரை இறக்கம்

கோவையில் மோசமான வானிலையால் அமைச்சர் வன்னியரசு வந்த விமானம் மதுரையில் தரை இறக்கம்
Updated on
1 min read

கோவை: கோவையில் மோசமான வானிலையால் அமைச்சர் வன்னியரசு வந்த விமானம் மதுரையில் தரை இறங்கியது.

தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, சேலத்தில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்வுக்காக நேற்று மதியம் சென்னையில் இருந்து கோவைக்கு தனியார் விமானத்தில் பயணிகளுடன் வந்தார். ஆனால் கோவையில் மோசமான வானிலை நிலவியதால் கோவை விமான நிலையத்தில் அவர் வந்த விமானம் தரை இறக்கப்படவில்லை.

தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தல்படி, வானத்தில் வட்டமடித்தபடி இருந்தது.இதனால் பயணிகள் கலக்கம் அடைந்தனர். தொடர்ந்து கோவை விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தல்படி, விமானம் தரை இறங்காமல் மதுரை விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து, மதுரையில் அமைச்சர் வன்னியரசு மற்றும் பயணிகள் இறங்கினர். மதுரையில் இருந்து சேலத்துக்கு சாலை மார்க்கமாக அமைச்சர் வன்னியரசு சென்றார்.

கோவையில் மோசமான வானிலையால் அமைச்சர் வன்னியரசு வந்த விமானம் மதுரையில் தரை இறக்கம்
அச்சிறுப்பாக்கத்தில் முதல்வர் விஜய் 25-ம் தேதி பிரச்சாரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in