கோவை ரயில் நிலைய குடிநீரில் ‘பாக்டீரியா’ பாதிப்பு: சிஏஜி அறிக்கையால் பயணிகள் அதிர்ச்சி

கோவை ரயில் நிலையத் தில் பயணிகள் பயன்படுத் தும் குடிநீர்.

கோவை ரயில் நிலையத் தில் பயணிகள் பயன்படுத் தும் குடிநீர்.

படம்: ஜெ.மனோகரன்

Updated on
1 min read

கோவை: கோவை மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு உள்ளிட்ட பிரதான ரயில் நிலையங்களில் குடிநீர் கூலர்களில் ஆபத்தான ‘இ- கோலி பாக்டீரியாக்கள்’ இருப்பது கண்டறியப்பட்டுள்ள தாக மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை ரயில் நிலை யத்தை நாளொன்றுக்கு சுமார் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்துகின்றனர். சேலம் ரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்கும் 94 ரயில் நிலை யங்களில், அதிக வருவாயை தரும் ரயில் நிலையமாக கோவை முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், தெற்கு ரயில்வே பயணிகள் வசதிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 45 சதவீதம் முதல் 77 சதவீதம் வரை முழுமையாக பயன்படுத்தவில்லை என சிஏஜி அறிக்கையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயணிகளின் வசதிகள், சுகாதாரம், குடிநீரின் தரம் ஆகியவற்றில் கோவை ரயில் நிலையம் சுணக்கத்தில் இருப்பதும், குடிநீர் கூலர்களில் இருந்து சேகரிக்கப்பட்ட நீர் மாதிரியில் ‘இ-கோலி பாக்டீரியாக்கள்’ இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரயில் பயணிகள் சிலரிடம் பேசியபோது, “இந்தியாவில் ரயில் நிலையங்கள் ஏழை, நடுத்தர மக்களின் நம்பிக்கைக்கு உரிய போக்குவரத்து மையமாக இருக்கின்றன.

நாள்தோறும் ஆயிரக்கணக் கிலான பயணிகள் பயன்படுத்தும் ரயில் நிலையத்தின் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் காப்பாற்றப்பட வேண்டும். மக்களுக்கு சுகாதாரமான வசதிகளை மேற்கொள்ள வேண்டியது அடிப்படை உரிமை. பயணிகளின் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில், குடிநீரின் தரத்தை மேம்படுத்தி பாதுகாப்பாக விநியோகிக்க வேண்டும்” என்றனர்.

ரயில்வே துறை பொறியாளர்கள் கூறும்போது, “கோவை ரயில் நிலையத்தில் 6 நடைமேடைகளில் சுமார் 80 குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன. குடிநீர் கூலர்கள் அனைத்து இடங்களிலும் இல்லை.

கோவை மாநகராட்சியில் இருந்து கிடைக்கும் நீரைத்தான் ரயில் நிலையத்துக்கு முழுமையாக வழங்குகிறோம். மாதந்தோறும் நீரை பரிசோதித்து வழங்குகிறோம். சிஏஜி அறிக்கை தொடர்பாக மத்திய அரசு மற்றும் ரயில்வே துறையின் வழிகாட்டுதல்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

மாநகராட்சி பொறியாளர்கள் கூறும்போது, “கோவை மாநகராட்சியில் இருந்து ரயில் நிலையம் குடிநீர் பெறலாம். ஆனால் அவர்களிடம் பெறும் குடிநீரை, எப்படி விநியோகம் செய்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

‘இ-கோலி பாக்டீரியா’ பாதிப்பு உள்ளதென்றால், கழிவுநீர் கலந்தால்தான் இந்த பிரச்சினை வரும். குடிநீரை பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தி தான், விநியோகத்துக்கு வழங்குகிறோம்” என்றனர்.

<div class="paragraphs"><p>கோவை ரயில் நிலையத் தில் பயணிகள் பயன்படுத் தும் குடிநீர். </p></div>
ஐ வான்ட் டு லிவ் (1958): நிரபராதியின் உயிர் | ஹாலிவுட் மேட்னி 44

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in