ஓசூர் பட்டாசுக் கடைகளில் தானியங்கி தீயணைப்பு கருவிகள் - செயல்படுவது எப்படி?

ஓசூர் பட்டாசுக் கடைகளில் தானியங்கி தீயணைப்பு கருவிகள் - செயல்படுவது எப்படி?
Updated on: 
2 min read

ஓசூர்: ஓசூரில் உள்ள பட்டாசு கடைகளில் தீ விபத்தை தானாகக் கண்டறிந்து தீயை அணைக்கும் தானியங்கி தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜுஜுவாடி மற்றும் அதையொட்டியுள்ள கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் நிரந்தரமாக செயல்பட்டு வருகின்றன. மேலும், தீபாவளி பண்டிகையையொட்டி இப்பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகளும் திறக்கப்படுகின்றன. இங்கு இரு மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்களும் பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசுக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் தீபாவளி பட்டாசுக் கடைகளுக்கு பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசுக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் தீபாவளி பட்டாசுக் கடைகளுக்கு பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே, இந்த ஆண்டு தீபாவளியையொட்டி பட்டாசுக் கடைகளில் மின்கசிவு உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் தீ விபத்துகளைத் தானாகக் கண்டறிந்து தீயை அணைக்கும் தானியங்கி தீயணைப்பு கருவிகளை தமிழகத்தில் முதல் முறையாகப் பொருத்த ஓசூர் பட்டாசுக் கடை உரிமையாளர்கள் முடிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து பட்டாசு விற்பனையாளர் கண்ணன் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை யொட்டி ஓசூர், ஜுஜுவாடி, சிப்காட் பகுதிகளில் 37 பட்டாசுக் கடைகளுக்கும், ஓசூர் வட்டத்தில் 118 கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடைகள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவதுடன், தேவையான பாதுகாப்பு உபகரணங்களும் முழுமையாக வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தீபாவளியை யொட்டி பட்டாசுக் கடைகளில் 500 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பட்டாசுக் கடையிலும் 60 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை அதிகரிக்கும்போது தானாகச் செயல்பட்டு, மோனோ அம்மோனியம் பாஸ்பேட் பொடியை வெளியிட்டு தீயை அணைக்கும் 'மாடுலர் எக்ஸ்டிங்குஷர்' எனப்படும் தானியங்கி தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இவை சுமார் 40 அடி சுற்றளவில் மின்கசிவு உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் தீயை உடனடியாகக் கட்டுப்படுத்தும். மனிதர்கள் இல்லாதபோதும் இக்கருவி செயல்படும். அதேபோல், மின்கசிவைத் தடுக்கும் வகையில் தானியங்கி ஆட்டோ ஆஃப் சுவிட்ச்'களும் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

கருவியின் செயல்பாடு

பட்டாசுக் கடைகளின் மேற்கூரையில் பொருத்தப்படும் இந்தத் தானியங்கி தீயணைப்பு கருவியின் அடிப்பகுதியில் வெப்ப உணர்வி அமைப்பு உள்ளது. அறையில் தீப்பற்றியதும் வெப்பநிலை குறிப்பிட்ட அளவை எட்டும்போது, கருவியில் உள்ள கண்ணாடிக் குடுவையில் நிரப்பப்பட்டுள்ள திரவம் விரிவடைகிறது.

இதனால் குடுவை உடைந்து, கருவியில் நிரப்பப்பட்டுள்ள தீயணைப்புப் பொடி நாலாபுறமும் தெளிக்கப்பட்டு தீ உடனடியாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தக் கருவிகள் மின்சாரக் கட்டுப்பாட்டு அறைகள், கணினி சர்வர் அறைகள், தொழிற்சாலைக் கிடங்குகள் மற்றும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத முக்கிய சேமிப்பு மையங்களில் பொருத்தப்படுகின்றன.

ஓசூர் பட்டாசுக் கடைகளில் தானியங்கி தீயணைப்பு கருவிகள் - செயல்படுவது எப்படி?
“டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாணையை திருத்தி வெளியிடுக”- தினகரன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in