ஆட்டோ ஓட்டுநர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்: அமைச்சர் பேச்சுவார்த்தையை அடுத்து முடிவு

ஆட்டோ ஓட்டுநர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்: அமைச்சர் பேச்சுவார்த்தையை அடுத்து முடிவு
Updated on: 
1 min read

சென்னை: ஆட்டோ ஓட்​டுநர் தொழிற்​சங்​கங்​களின் பிர​தி​நி​தி​களு​டன் போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் விஜய் தமிழன் பார்த்​திபன் நடத்​திய சமரசப் பேச்​சு​வார்த்​தை​யில் உடன்​பாடு ஏற்​பட்​டதை அடுத்து உண்​ணா​விரதப் போராட்​டம் வாபஸ் பெறப்​பட்​டது.

தமிழ்​நாடு ஆட்டோ ஓட்​டுநர் சங்​கங்​களின் கூட்​டமைப்​பின் சார்​பில், ஆட்டோ ஓட்​டுநர்​களின் பல்​வேறு வாழ்​வா​தா​ரக் கோரிக்​கைகளை வலி​யுறுத்தி நேற்று சென்னை எழும்​பூரில் உள்ள ராஜரத்​தினம் விளை​யாட்டு மைதானம் அரு​கில் பெரும் திரள் உண்​ணா​விரதப் போராட்​டம் நடை​பெற்​றது.

போராட்​டம் தீவிரமடைந்​ததைத் தொடர்ந்​து, போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் விஜய் தமிழன் பார்த்​திபன் போராட்​டத்​தில் ஈடு​பட்​டிருந்த 20-க்​கும் மேற்​பட்ட தொழிற்​சங்​கங்​களின் பிர​தி​நி​தி​களு​டன் அவசரப் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.

இப்​பேச்​சு​வார்த்​தை​யின் போது, ஆட்டோ ஓட்​டுநர்​களின் நலன் மற்​றும் வாழ்​வா​தா​ரம் சார்ந்த பல்​வேறு கோரிக்​கைகளை தொழிற்​சங்​கப் பிர​தி​நி​தி​கள் விரி​வாக எடுத்​துரைத்​தனர்.

தொழிற்​சங்​கங்​களின் கோரிக்​கைகள் ஏற்​கெனவே அரசின் தீவிர பரிசீலனை​யில் உள்​ள​தாக​வும், முதல்​வரின் கவனத்​துக்குக் கொண்டு சென்​று, ஓட்​டுநர்​களின் நியாய​மான கோரிக்​கைகள் அனைத்​தும் விரைந்து நிறைவேற்​றப்​படும் என அமைச்​சர் பார்த்​திபன் உறு​தி​யளித்​தார். பேச்​சு​வார்த்தை சுமுக​மாக நடந்த நிலை​யில் தொழிற்​சங்​கப் பிர​தி​நி​தி​கள், தங்​களது உண்​ணா​விரதப் போராட்​டத்​தைக் கைவிடு​வ​தாக அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​தனர்​.

ஆட்டோ ஓட்டுநர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்: அமைச்சர் பேச்சுவார்த்தையை அடுத்து முடிவு
குதிரை பேரத்தில் ஈடுபடும் தவெக அரசு, அமைச்சர்கள் மீது நடவடிக்கை: ஆளுநரிடம் அதிமுக மீண்டும் மனு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in