

பதவி விலகிய அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேரிடம் விசாரணை மேற்கொண்ட பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர். உடன் அதிமுக எம்எல்ஏக்கள், வழக்கறிஞர்கள். | படங்கள்: எல்.சீனிவாசன் |
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்தனர்.
அதற்கு முன்பாக கொறாடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக் கெடுப்பில் வாக்களித்தனர்.
இதையடுத்து இவர்கள் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கக்கோரி சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரிடம், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி புகார் அளித்திருந்தார்.
மேலும், 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி அதிமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
விசாரணைக்கு ஆஜரான இசக்கி சுப்பையா மற்றும் ஜெயக்குமார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக 2 மாதங்களுக்குள் சட்டப்பேரவைத் தலைவர் விசாரணை நடத்தி உரிய முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
அதன்படி சட்டபேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது.
இதில் இசக்கி சுப்பையா, ஜெயக்குமார் ஆகியோர் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கங்களை எடுத்துரைத்தனர். மரகதம் குமரவேலும், சத்யபாமாவும் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று தவெக எம்எல்ஏக்களாக தற்போது பதவி வகிக்கின்றன.
இவர்களின் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, அவர்கள்தரப்பு வாதங்களை முன்வைத் தனர். அதிமுக தரப்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம் மற்றும் இன்பதுரை எம்.பி ஆகியோர் பங்கேற்றனர். அடுத்தகட்ட விசாரணை நவ.12-ம் தேதியும் (நாளை), இறுதிக்கட்ட விசாரணை நவ. 17-ம் தேதியும் நடைபெற உள்ளது.