ஜூன் 23 வரை சட்டப்பேரவை கூட்டம்

ஜூன் 23 வரை சட்டப்பேரவை கூட்டம்
Updated on
1 min read

சென்னை: தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் கூறியதாவது: அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி ஆளுநர் உரைக்கு நன்றி கூறும் தீர்மானத்தின் மீதான விவாதம் 19-ம் தேதி (இன்று) தொடங்கி 23-ம் தேதி வரை 3 நாட்கள் நடத்தப்படும்.

இதில் 20, 21-ம் தேதிகள் (சனி, ஞாயிறு) விடுமுறை யாகும். இது குறுகியகால கூட்டத் தொடர் என்பதால் கேள்வி அனுப்பி, சார்ந்த துறையில் இருந்து பதில் பெற்றுத் தருவதில் காலதாமதம் ஏற்படும். எனவே வினா-விடை நேரம் இந்த தொடரில் இருக்காது.

சட்டப்பேரவையில் இருமுறை தேசிய கீதம் பாடப்பட்டதில் எந்த தவறும் இல்லை. நமக்கு தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும். அது நிறை வேற்றப்பட்டதில் அனைவருக் கும் மகிழ்ச்சி.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுமுகமான முறையில் இந்த பேரவையை நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கிய ஆளுநருக்கு நன்றி. ஆளுநர் உரையில் திருத்தங்கள் கோருபவர்கள் அதன் விவரங்களை எழுத்துப்பூர்வமாக 19-ம் தேதி (இன்று) மதியம் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

அதை அலுவல் ஆய்வு குழுவில் கட்சிகளின் பிரதிநிதித்துவம் அடிப்படையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேரவைத் தலைவர் தெரிவித்தார்.

ஜூன் 23 வரை சட்டப்பேரவை கூட்டம்
போதையை ஒழிக்க அனைத்து மாவட்டங்களிலும் ‘போதைப் பொருள் தடுப்பு சிறப்புப் படை’

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in