வருமானவரித் துறையினரை தாக்கியதாக வழக்கு: கரூர் மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்ட திமுகவினர் 140 பேருக்கு முன்ஜாமீன்

வருமானவரித் துறையினரை தாக்கியதாக வழக்கு: கரூர் மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்ட திமுகவினர் 140 பேருக்கு முன்ஜாமீன்
Updated on
1 min read

கரூர்: வரு​மானவரித் துறை​யினரை தாக்​கிய வழக்​கில் கரூர் மேயர் கவிதா உள்​ளிட்ட திமுக​வினர் 140 பேருக்கு முன்​ஜாமீன் வழங்கி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்​ளது.

முன்​னாள் அமைச்​சர் செந்​தில்​ பாலாஜி எம்​எல்ஏ 2011-2015-ம் ஆண்டு அதி​முக ஆட்​சிக் காலத்​தில் போக்​கு​வரத்​துத் துறை அமைச்​ச​ராக இருந்​த​போது, போக்​கு​வரத்​துக் கழகத்​தில் வேலை வாங்​கித் தரு​வ​தாக தெரி​வித்து பணம் பெற்​ற​தாக வழக்கு தொடரப்​பட்​டது. பின்​னர், சமரசம் ஏற்​பட்ட இந்த வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் மறு​வி​சா​ரணை நடத்த 2023-ல் உத்​தர​விட்​டது.

இதையடுத்​து, கரூர் ராமகிருஷ்ணபுரத்​தில் உள்ள செந்​தில் பாலாஜி​யின் தம்பி அசோக்​கு​மார் வீட்​டில் சோதனை நடத்த வரு​மான வரித் துறை அதி​காரி​கள் 10-க்​கும் அதி​க​மானோர் 2023, மே 26-ம் தேதி வாக​னங்களில் வந்​தனர். அசோக்​கு​மார் வீடு பூட்​டி​யிருந்​த​தால், வரு​மான வரித் துறை அதி​காரி​கள் கதவை திறந்து வீட்டு வராண்டா பகு​திக்குச் சென்​றனர்.

அப்​போது, அங்கு திரண்​டிருந்த திமுக​வினர், அதி​காரி​களிடம் வாக்​கு​வாதம் செய்​து, அவர்கள் வந்த காரின் முன்​பக்க கண்ணாடி, பக்​க​வாட்டு கண்​ணாடி ஆகிய​வற்றை உடைத்து அதிகாரி​களை​யும் தாக்​கினர். இதில் காயமடைந்த வரு​மானவரித் துறை அதி​காரி​கள், கரூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர்.

பின்​னர், இதுகுறித்து வரு​மானவரித் துறை அதி​காரி​கள் அளித்த புகாரின்​பேரில் திமுக​வினர் 100-க்​கும் அதி​க​மானோர் மீது கரூர் நகர போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர். தமிழகத்​தில் தற்​போது ஆட்சி மாற்​றம் ஏற்​பட்ட நிலை​யில், ஜூன் 20-ம் தேதி இவ்​வழக்கு தொடர்​பாக செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் அசோக்​கு​மாரை தேடி கரூர் போலீ​ஸார் சென்னை சென்​றனர்.

இதையடுத்​து, கரூர் மாநக​ராட்சி மேயர் கவி​தா, திமுக மாவட்ட துணைச் செய​லா​ளர் மகேஸ்​வரி உள்​ளிட்ட திமுக​வினர் 140 பேருக்கு முன்​ஜாமீன் கோரி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் கடந்த வாரம் மனுத்தாக்​கல் செய்​யப்​பட்​டது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலை​யில், மாநக​ராட்சி மேயர் கவிதா உள்​ளிட்ட திமுக​வினர் 140 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி தங்​கவேல் உத்​தர​விட்​டார்.

வருமானவரித் துறையினரை தாக்கியதாக வழக்கு: கரூர் மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்ட திமுகவினர் 140 பேருக்கு முன்ஜாமீன்
போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின் அணி | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in