பென்னிகுயிக்குக்கு செலுத்தும் நன்றிக்கடனாக கலாச்சார இணைப்புத் திட்டத்தில் கேம்பர்லீ - மதுரை பொங்கல் திருநாளில் ஒப்பந்தம்

பென்னிகுயிக்குக்கு செலுத்தும் நன்றிக்கடனாக கலாச்சார இணைப்புத் திட்டத்தில் கேம்பர்லீ - மதுரை பொங்கல் திருநாளில் ஒப்பந்தம்
Updated on
1 min read

சென்னை: ​முல்லை பெரி​யாறு அணை​யைக் கட்​டிய பென்​னிகு​யிக்​குக்கு நன்​றிக்​கட​னாக, கலாச்​சார இணைப்​புத் திட்​டத்​தில் கேம்​பர்லீ - மதுரை நகரங்​களை கொண்​டு​வரு​வதற்​கான ஒப்​பந்​தம் பொங்​கல் திரு​நாளில் கையெழுத்​தாக உள்​ளது.

தமிழகத்​தின் தென் மாவட்​டங்​களின் முக்​கிய நீரா​தா​ர​மாக விளங்​கும் முல்லை பெரி​யாறு அணையை கட்​டிய​வர் பொறி​யாளர் ஜான் பென்னி குயிக். பல்​வேறு நெருக்​கடிகளுக்கு மத்​தி​யில் இந்த அணையை அவர் கட்டி முடித்​தார்.

அவரது நினை​வைப் போற்​றும் வகை​யில் தேனி மாவட்​டம் கூடலூரில் பென்னி குயிக் மணிமண்​டபம் கட்​டப்​பட்​டுள்​ளது. மேலும், அவர் பிறந்த கேம்​பர்லீ நகரத்​தில் தமிழக அரசு சார்​பில் சிலை​யும் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

அதைத்​தொடர்ந்து கலாச்​சார இணைப்​புத் திட்​டத்​தின்​கீழ் மதுரை மற்​றும் கேம்​பர்லீ நகரங்​களைக் கொண்​டுவர தமிழக அரசு முடிவுசெய்​தது. இது தொடர்​பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த செப்​.9-ம் தேதி செய்தி வெளி​யிடப்​பட்​டது.

அந்​தவகை​யில் இரு நகரங்​களுக்​கும் இடையே​யான கலாச்​சார இணைப்பு ஒப்​பந்​தம் பொங்​கல் திரு​நாளில் மதுரை​யில் கையெழுத்​தாக இருப்​ப​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

இதுகுறித்து கேம்​பர்லீ தமிழர் பிரிட்​டீஷ் அசோசி​யேஷன் செய​லா​ளர் சந்​தான பீர் ஒலி கூறிய​தாவது: இந்த ஒப்​பந்​தம் இரு நகரங்​களுக்கு இடையே வரலாற்​று ரீ​தி​யான தொடர்பை புதுப்​பிப்​பதுடன், எதிர்​கால வளர்ச்​சிக்​கும் வித்​திடும். குறிப்​பாக கலாச்​சார பரி​மாற்​றம், தொழில் முதலீடு​கள், கல்வி போன்ற அம்​சங்​களை மேம்​படுத்​தும்.

அதன்​படி சர்ரே மாகாணத்​தின் மேயர் லூயிஸ் ஆஷ்பெரி தலை​மையி​லான குழு​வினர் தமிழகத்​துக்கு ஜன.11-ம் தேதி வருகை தரவுள்​ளனர். அன்​றைய தினம் முதல்​வர் மு.க.ஸ்​டா​லினை சென்​னை​யில் சந்​தித்து ஒப்​பந்​தம் குறித்து கலந்​துரை​யாட உள்​ளனர். அதன்​பின்​னர் மதுரை மற்​றும் தேனி மாவட்​டங்​களுக்​குச் சென்று ஜன.14-ம் தேதி பொங்​கல் விழாக்​களில் பங்​கேற்​க​வுள்​ளனர்.

அவனி​யாபுரம் ஜல்​லிக்​கட்டு போட்​டிகளை​யும் அவர்​கள் பார்​வை​யிடு​கின்​றனர். இறு​தி​யாக இரு நகரங்​களின் ஆணை​யர்​களும் ஜன.16-ம் தேதி கலாச்​சார இணைப்பு திட்ட ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட உள்​ளனர். பென்னி குயிக் என்ற மாமனிதருக்கு நாம் செலுத்​தும் நன்​றிக்​கட​னாக இது அமை​யும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

பென்னிகுயிக்குக்கு செலுத்தும் நன்றிக்கடனாக கலாச்சார இணைப்புத் திட்டத்தில் கேம்பர்லீ - மதுரை பொங்கல் திருநாளில் ஒப்பந்தம்
மெரினாவில் பாரம்பரிய கலை நிகழ்ச்சி: ஏராளமானோர் கண்டு ரசித்தனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in