வீட்டில் கணக்கில் வராத பணம் சிக்கிய விவகாரம்: உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா குற்றவாளி

மக்களவை விசாரணைக் குழு அறிக்கையில் தகவல்
வீட்டில் கணக்கில் வராத பணம் சிக்கிய விவகாரம்: உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா குற்றவாளி
Updated on
2 min read

புதுடெல்லி: டெல்லி உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி யஷ்வந்த் வர்​மா​வின் வீட்​டில், கணக்​கில் வராத பெரும்​தொகை சிக்​கிய வழக்​கில் அவர் குற்​ற​வாளி என்று மக்​களவை விசா​ரணைக் குழு அறிக்கை அளித்​துள்​ளது.

டெல்லி உயர் நீதி​மன்ற நீதிப​தி​யாகப் பதவி வகித்​தவர் யஷ்வந்த் வர்​மா. கடந்த மார்ச் 14, 2025 அன்று டெல்​லி​யில் உள்ள நீதிபதி வர்​மா​வின் வீட்​டில் திடீரென தீ விபத்து ஏற்​பட்​டது. அப்​போது அவர் வீட்​டில் இல்​லை. தகவல் அறிந்து தீயை அணைக்க டெல்லி தீயணைப்​புத் துறை மற்​றும் காவல் துறை அதி​காரி​கள் விரைந்து வந்​தனர். அப்​போது, நீதிபதி வர்​மா​வின் வீட்​டில் உள்ள பொருட்​கள் வைக்​கும் அறை​யில் பெரு​மளவி​லான எரிந்த மற்​றும் அரைகுறை​யாக எரிந்த ரூ.500 நோட்​டுக் கட்​டு​கள் குவிந்து கிடப்பதைக் கண்​டறிந்​தனர்.

முதற்​கட்ட விசா​ரணை​யில் தீ விபத்து நடந்த அறை தன்​னுடைய கட்​டுப்​பாட்​டில் இல்லை என்று நீதிபதி வர்மா தெரி​வித்​தார். மேலும், நீதிப​தி​யின் உதவி​யாளர்​கள் முன்​னிலை​யில் அறை சுத்​தம் செய்​யப்​பட்​டு, பணமும் மாய​மானது.

விவ​காரத்​தின் தீவிரத்​தைக் கருத்​தில் கொண்​டு, இதுகுறித்து விரி​வான விசா​ரணை தேவை என்று அன்​றைய உச்ச நீதி​மன்​றத் தலைமை நீதிபதி சஞ்​சீவ் கன்​னா​விடம் டெல்லி உயர் நீதி​மன்​றத் தலைமை நீதிபதி டி.கே.உ​பாத்​யா​யா முதற்​கட்ட அறிக்​கை​யைச் சமர்ப்​பித்​தார். இதனிடையே, வர்மா அலகா​பாத் உயர் நீதி​மன்​றத்​துக்கு மாற்​றப்​பட்​டார்.

மார்ச் 22, 2025 அன்​று, அப்​போதைய உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சஞ்​சீவ் கன்னா, 3 உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் கொண்ட குழுவை அமைத்​தார்.

இக்​குழு சாட்​சிகளை விசா​ரித்து மே 2025-ல் சமர்ப்​பித்த அறிக்கையில், பணம் வைக்​கப்​பட்​டிருந்த அந்த அறை நீதிபதியின் கட்​டுப்​பாட்​டிலேயே இருந்​தது என்​றும், குற்றச்சாட்டுகளில் உண்மை உள்​ளது என்​றும் உறுதி செய்​தது.

இந்​நிலை​யில், நீதிபதி வர்​மாவைப் பதவி நீக்​கம் செய்​யக் கோரி செப்​டம்​பர் 2025-ல் மக்​களவை​யில் தீர்​மானம் கொண்​டு​ வரப்பட்டது. சபா​நாயகர் ஓம் பிர்லா தீர்​மானத்தை ஏற்​றுக் கொண்​டார். அதை தொடர்ந்​து, உச்ச நீதி​மன்ற நீதிபதி அரவிந்த் குமார் தலை​மை​யில் விசா​ரணைக் குழுவை ஓம் பிர்லா அமைத்​தார். இந்​தக் குழு​வால் நவம்​பர் 26 அன்று அவர் மீது குற்​றப்​பத்​திரிகை தயா​ரிக்​கப்​பட்​டது. இதனிடையே, கடந்த ஏப்​ரல் 10-ம் தேதி அவர் பதவி வில​கி​னார்.

மேலும், விசா​ரணைக் குழுவை எதிர்த்து நீதிபதி வர்மா மனு தாக்​கல் செய்​திருந்​தார். அவரது மனுவை உச்ச நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது. இதனைத் தொடர்ந்​து, டெல்லி காவல் துறை, சிஆர்​பிஎப் மற்​றும் தீயணைப்​புத் துறை அதி​காரி​களிடம் மார்ச் 13 முதல் 17 வரை விசா​ரணை நடத்​தப்​பட்​டது. அவர்​களின் சாட்​சி​யப் பதிவு​களும் நிறைவடைந்​தன.

இதன் தொடர்ச்​சி​யாகவே, 2 தொகு​தி​கள் கொண்ட முழு​மை​யான விசா​ரணை அறிக்​கையை விசா​ரணைக் குழு மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா​விடம் நேற்று சமர்ப்​பித்​தது.

அதில், நீதிபதி யஷ்வந்​த்​ வர்​மா வீட்​டில்​ இருந்​த பணம்​ அவருக்​கு சொந்​த​மானது என்​பது சந்​தேகத்​துக்​கு இடமின்​றி நிரூபிக்​கப்​பட்​டுள்​ள​தால்​, அவரைப் பத​வி நீக்​கம்​ செய்​யப்​ பரிந்​துரை செய்துள்ளது.

வீட்டில் கணக்கில் வராத பணம் சிக்கிய விவகாரம்: உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா குற்றவாளி
போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னை, மதுரை உட்பட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in