தமிழகத்தின் முழுநேர ஆளுநரானார் ஆர்லேகர்

Arlekar new full-time Governor of T.N

Arlekar new full-time Governor of T.N

Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்​தின் முழுநேர ஆளுந​ராக ராஜேந்​திர விஸ்​வ​நாத் ஆர்​லேகரை நியமித்து குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு உத்​தர​விட்​டுள்​ளார்.

தமிழக ஆளுந​ராக கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஆர்​.என். ரவி பதவி வகித்து வந்த நிலை​யில், கடந்த மார்ச் மாதம் அவர் மேற்கு வங்க ஆளுந​ராக மாற்​றப்​பட்​டார்.

அதனைத் தொடர்ந்​து, கேரள மாநில ஆளுந​ராகப் பதவி வகித்து வந்த ராஜேந்​திர விஸ்​வ​நாத் ஆர்​லேகரிடம் தமிழக ஆளுநருக்​கான கூடு​தல் பொறுப்பு வழங்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், அவர் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்​பாகக் குடியரசுத் தலை​வர் மாளிகை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: சிக்​கிம் மாநில ஆளுந​ராக இருந்த ஓம் பிர​காஷ் மாத்​தூர் கேரள மாநில ஆளுந​ராக மாற்​றப்​பட்​டுள்​ளார். கேரள மாநில ஆளுந​ராகப் பொறுப்பு வகித்த ராஜேந்​திர விஸ்​வ​நாத் ஆர்​லேகர் தமிழகத்​தின் முழுநேர ஆளுந​ராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

ஒடிசா மாநில ஆளுந​ராக பிரஜ் மோகன் ராம், கர்​நாடக மாநில ஆளுந​ராக டாக்​டர் சுதா யாதவ், உத்​த​ராகண்ட் மாநில ஆளுந​ராக டாக்​டர் தால் சிங் பிசென் மற்​றும் சிக்​கிம் மாநிலத்​தின் புதிய ஆளுந​ராக துஷ்யந்த் கவுதம் ஆகியோர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p><strong>Arlekar new full-time Governor of T.N</strong></p></div>
இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி: ராகுல், மம்தா, அகிலேஷ் பங்கேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in