குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்: வாரியம் அறிவுறுத்தல்

குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்: வாரியம் அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: சென்னை குடிநீர் வாரி​யம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்​சிக்​குட்​பட்ட புதி​தாக இணைக்​கப்​பட்ட மணலி, மாதவரம், வளசர​வாக்​கம், ஆலந்​தூர், பெருங்​குடி, சோழிங்​கநல்​லூர் ஆகிய மண்​டலங்​களில் குடிநீர் விநி​யோகக் குழாய்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

பாதாள சாக்​கடை கட்​டமைப்​பும் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது. புதிய குடிநீர் மற்​றும் கழி​வுநீர் இணைப்பு பெற சென்னை குடிநீர் வாரிய இணை​யதளத்​தில் (https://wsc.chennaimetrowater.in/#/nc/login) மட்​டும் விண்​ணப்​பிக்க வேண்​டும். செலுத்த வேண்​டிய கட்டண விவரங்​கள் இணைய வழி​யில் தகவல் தெரிவிக்​கப்​படும். விண்​ணப்​ப​தா​ரர் இணை​ய​வழி​யில் மட்​டுமே கட்​ட​ணத்தை செலுத்த வேண்​டும்.

விண்​ணப்​பிக்​கும்​போது சென்னை மாநக​ராட்சி சொத்து வரி மதிப்​பீட்டு நகல், சிஎம்​டிஏ, மாநக​ராட்சி மூலம் வழங்​கப்​பட்ட திட்ட அனு​ம​தி, கட்​டிட அனு​மதி மற்​றும் வரைபடம், கட்​டிடப் பணி​கள் நிறைவு சான்​றிதழ் நகல், ஏற்​கெனவே உள்​கட்​டமைப்பு மேம்​பாட்​டுக் கட்​ட​ணம் செலுத்​தி​யிருந்​தால் அதற்​கான ஆதா​ரம் அல்​லது ரசீது நகல் இணைக்​கப்பட வேண்​டும்.

மாநக​ராட்​சி​யின் வரி மதிப்​பீடு செய்​யப்​ப​டாத கட்​டிடங்​களுக்​கு, ஒவ்​வொரு சமமான குடி​யிருப்பு அலகுக்​கும் ரூ.3 ஆயிரம் முன் வரி​யாக செலுத்த வேண்​டும். மழைநீர் சேகரிப்பு தொடர்​பான உறு​தி​மொழி அல்​லது அறி​விப்பு படிவத்​தை​யும் சமர்ப்​பிக்க வேண்​டும்.

தனி வீடு​கள் 46.47 ச.மீ (500 சதுர அடி) வரை குடிநீர் கட்​ட​ணம், கழி​வுநீர் கட்​ட​ணம் தலா ரூ.100 மட்​டும் செலுத்த வேண்​டும். 100 சதுர மீட்​டர் வரை தலா ரூ.5 ஆயிரம், 101 முதல் 200 சதுர மீட்​டர் வரை தலா ரூ.7500 செலுத்த வேண்​டும். சாலைத் துண்​டிப்​பு, குழாய் பதிக்​கும் கட்​ட​ணங்​கள் மற்​றும் குடிநீர் அளவு மானிகள் பொருத்​தும் கட் ​ணங்​கள் நடை​முறை விதி​முறை​களின்​படி வசூலிக்​கப்​படும்.

அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் 200 சதுர மீட்​டர் வரை குடிநீர், கழி​வுநீர் கட்​ட​ணம் என தலா ரூ.7500 செலுத்த வேண்​டும். குடி​யிருப்பு அல்​லாத வணிக வளாகங்​கள் போன்ற வணி​கக் கட்​டிடங்​களுக்கு ஒவ்​வொரு 100 சதுர மீட்​டருக்​கும் தலா ரூ.7,500/- கட்​ட​ணம் வசூலிக்​கப்​படும்.

ஓட்​டல்​கள், விடு​தி​களு​டன் கூடிய கல்வி நிறு​வனங்​கள் உள்​ளிட்ட கட்​டிடங்​களுக்கு ஒவ்​வொரு 50 சதுர மீட்​டருக்​கும் தலா ரூ.7500 கட்​ட​ணம் வசூலிக்​கப்​படும். உள் நோயாளி வசதி​கொண்ட மருத்​து​வ​மனை​களுக்கு ஒவ்​வொரு 25 சதுர மீட்​டருக்கு ரூ.7,500 கட்​ட​ணம் வசூலிக்​கப்​படும்.

தரைத்​தளம் மற்​றும் முதல் தளம் வரை 1800 சதுர அடி வரையி​லான கட்​டிடங்​களுக்​கான குடிநீர் மற்​றும் கழி​வுநீர் இணைப்பு கட்​ட​ணம், சாலை வெட்டு சீரமைப்​புக் கட்​ட​ணம் அதி​கபட்​சம் 10 அரை​யாண்​டுத் தவணை​களில் செலுத்​தலாம்​.

குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்: வாரியம் அறிவுறுத்தல்
இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி - மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in