கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கான பணி ஆணை ரத்து உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு

உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்
உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்
Updated on
2 min read

புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசல் சம்​பவத்​தில் உயி​ரிழந்த நபர்​களின் குடும்​பத்​தா​ருக்கு வழங்​கப்​பட்ட அரசு பணி ஆணை கருணை அடிப்​படையி​லானது அல்ல, மாறாக குடும்​பத்​தின் மறு​வாழ்​வுக்​கான நடவடிக்கை ஆகும், எனவே சென்னை உயர்​ நீ​தி​மன்ற உத்​தர​வுக்கு தடை விதிக்க வேண்​டும் என்று உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

கரூர் மாவட்​டம் வேலுச்​சாமிபுரத்​தில் கடந்​தாண்டு செப்​டம்​பரில் தற்​போதைய முதல்​வர் விஜய் பங்​கேற்ற தவெக பரப்​புரைக் கூட்​டத்​தில் ஏற்​பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி​யா​யினர், 140-க்​கும் மேற்​பட்​டோர் படு​காயமடைந்​தனர். இந்த விவ​காரம் தொடர்​பாக உச்​சநீ​தி​மன்ற உத்​தர​வுப்​படி சி.பி.ஐ அதி​காரி​கள் விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

இதற்​கிடையே, தமிழகத்​தில் நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தமிழக வெற்​றிக்​கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்​துள்ள நிலை​யில், கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி கரூர் சென்ற முதல்​வர் விஜய், தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தில் ஒரு​வருக்கு கருணை அடிப்​படை​யில் அரசு வேலைக்​கான பணி நியமன ஆணையை வழங்​கி​னார்.

இதையடுத்​து, இந்த நடவடிக்​கைக்கு எதி​ராக நாம் தமிழர் கட்​சி​யின் தீரன் திரு​முரு​கன், மதுரையைச் சேர்ந்த வழக்​கறிஞர் சீனி அகமது உட்பட மூன்று பேர் உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் பொதுநல வழக்கு தொடர்ந்​தனர். அந்த, வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​கள் குடும்​பத்​தினருக்கு அரசு பணி வழங்கி பிறப்​பித்த அரசாணையை ரத்து செய்து உத்​தர​விட்​டிருந்​தது.இதை யடுத்து இந்த விவ​காரத்​தில் தமிழக அரசு உச்​சநீ​தி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தது.

இந்த நிலை​யில், பணி​யாணை ரத்து விவ​காரத்​தில் உயர் நீதி​மன்ற உத்​தர​வுக்கு எதி​ராக, பணி நியமன ஆணை ரத்​தால் பாதிக்​கப்​பட்​ட​வர்​களாகிய பிர​பாகரன் செல்​வகுமார் மற்​றும் பி.ஆனந்த ஜோதி ஆகியோர் தனித்​தனி​யாக உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​துள்​ளனர். அதில், ஆனந்த ஜோதி​யைப் பொறுத்​தவரை தன்​னுடைய மனைவி மற்​றும் இரண்டு குழந்​தைகளை கரூர் கூட்ட நெரிசலில் இழந்​த​தாக தெரி​வித்​துள்​ளார்.

அவர் தனது மனு​வில், ‘தற்​போது பள்ளி கல்​வித்​துறை அலு​வல​கத்​தில் இளநிலை உதவி​யாள​ராக பணி​யாணை பெற்​றேன். ஆனால் அது சென்னை உயர் நீதி​மன்​றத்​தால் ரத்து செய்​யப்​பட்டு இருக்​கிறது. சென்னை உயர் நீதி​மன்​றம், அரசு வழங்​கிய பணி ஆணை கருணை அடிப்​படை​யில் வழங்​கப்​பட்​டுள்​ள​தால் அது அரசி​யலமைப்​பின் பிரிவு 14 மற்​றும் 16 ஆகிய​வற்றை மீறும் செயல் என்று தெரி​வித்​திருக்​கிறது.

இது சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் தவறான கண்​ணோட்​ட​மாகும். மேலும், அரசு வழங்​கிய பணி ஆணை என்​பது கருணை அடிப்​படை​யில் ஆனது அல்ல. மாறாக ஒரு குடும்​பத்​தின் வாழ்​வா​தா​ரத்​திற்​காக​வும், குடும்​பத்​துக்கு மறு​வாழ்வு அளிப்​ப​தற்​காக​வும் வழங்​கப்​பட்​டது.

எனவே சென்னை உயர்​நீதி​மன்​றத்​தின் உத்​தர​வானது இயற்கை நீதிக்கு எதி​ரானது, மேலும் அரசின் கொள்கை முடிவு​களுக்கு எதி​ராக நீதி​மன்​றம் தனது அதி​கார வரம்பை நுழைத்​துள்​ளது. எனவே கரூர் விவ​காரத்​தில் பணி ஆணை வழங்​கப்​பட்டதை ரத்து செய்த சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வுக்கு தடை வி​திக்க வேண்​டும்’ என்று கூறி​யுள்​ளார். இதையடுத்து, மனு​தா​ரர்​கள் தாக்​கல் செய்த வழக்​கு​கள் உச்ச நீதி​மன்​றத்​தில் விரை​வில் வி​சா​ரணைக்​கு வரும்​ என்​று எ​திர்​பார்​க்​கப்​படுகிறது.

உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்
திமுக ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாகப் பேசியதாக வழக்கு: உதயநிதி கைதாகி விடுதலை - முழு விவரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in