கிராமசபை தீர்மானங்களை அறிந்துகொள்ள செயலி: ஊரக வளர்ச்சித் துறை சார்பில் விரைவில் அறிமுகம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: கிராமசபை கூட்​டங்​களில் நிறைவேற்​றப்​படும் தீர்​மானங்​கள் உள்​ளிட்ட செயல்​பாடு​களை அறிந்​து​கொள்ள புதிய செயலியை ஊரக வளர்ச்​சித் துறை விரை​வில் அறி​முகம் செய்​ய​வுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

தமிழகத்​தில் 12,571 கிராம ஊராட்​சிகள் உள்​ளன. ஊராட்​சிகளின் கணக்கு வழக்​கு​கள், முக்​கிய தேவை​கள் குறித்து ஆலோ​சனை செய்து தீர்​மானம் நிறைவேற்ற ஆண்​டு​தோறும் 6 முறை கிராமசபைக் கூட்​டங்​கள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. இந்​தக் கூட்​டம் ஊராட்​சித் தலை​வ​ரால் கூட்​டப்​படும். அப்​போது, கிராமத்​தின் தேவை​கள் மற்​றும் ஏற்​கெனவே நிறைவேற்​றப்​பட்ட பணி​கள் குறித்த திட்ட அறிக்​கை​யை, அரசு அதி​காரி முன்​னிலை​யில் பொது​மக்​களிடம் சமர்ப்​பிக்க வேண்​டும்.

அதே​போல், ஊராட்சி மன்ற நிர்​வாகத்​தில் வெளிப்​படைத் தன்​மையை ஊக்​கு​விப்​பதே இதன் நோக்​க​மாகும். சட்​டப்​பேரவை மற்​றும் நாடாளு​மன்​றத்​துக்கு இணை​யான அதி​காரம், கிராம சபைக் கூட்​டங்​களுக்கு உள்​ளது. இந்​நிலை​யில் கிராமசபைக் கூட்​டத்​தில் நிறைவேற்​றப்​படும் தீர்​மானங்​கள் உள்​ளிட்ட தகவல்​களை பொது​மக்​கள் அறிந்​து​கொள்ள ஏது​வாக கிராமசபை செயலியை ஊரக வளர்ச்​சித்​துறை உரு​வாக்​கி​யுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்​சித்​துறை அதி​காரி​கள் கூறும்​போது, “கி​ராமசபை நடவடிக்​கைகளை இளைஞர்​கள் உள்பட அனைத்து தரப்​பினரும் அறிந்து கொண்​டால் உள்​ளாட்சி நிர்​வாகத்​தில் முறை​கேடு​கள் நடை​பெறு​வதைத் தடுக்க முடி​யும். இதற்​காக கிராமசபை​யின் நிகழ்ச்சி நிரல், நிறைவேற்​றப்​படும் தீர்​மானங்​கள் உள்​ளிட்ட தகவல்​களை கிராம மக்​கள் அறி​யும் வித​மாக, புதிய செயலி உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த செயலி விரை​வில் செயல்​பாட்​டுக்கு வரும். அக்​.2-ம் தேதி நடை​பெறவுள்ள கிராமசபைக் கூட்​டத்​தில் இதுபற்​றிய விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்​படும். மேலும், இந்த செயலி மூல​மாக வருங்​காலத்​தில் ஊராட்சி அமைப்​பு​களில் நடை​பெறும் ஒப்​பந்​தங்​கள், திட்​டப்​பணி​கள் உள்பட பல்​வேறு தகவல்​களை அறிந்து கொள்​ள​வும்​ வழி​வகை செய்​யப்​படும்​” என்​றனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
டெல்லியில் ‘பிரிக்ஸ்’ மாநாடு கோலாகலம்: ரஷ்ய அதிபர் புதின் - பிரதமர் மோடி பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in