லஞ்ச ஒழிப்​பு டிஜிபி ஓய்​வு​பெற்ற நிலை​யில் ஐஜி துரைகுமாருக்கு கூடு​தல் பொறுப்பு வழங்கல்

லஞ்ச ஒழிப்​பு டிஜிபி ஓய்​வு​பெற்ற நிலை​யில் ஐஜி துரைகுமாருக்கு கூடு​தல் பொறுப்பு வழங்கல்
Updated on
1 min read

சென்னை: லஞ்ச ஒழிப்​புத் துறை டிஜிபி ஓய்​வு​பெற்றதால், அப்​பிரிவு ஐஜி துரை குமாருக்கு கூடு​தல் பொறுப்பு வழங்​கப்​பட்​டுள்ளது.

தமிழக காவல் துறையில் லஞ்ச ஒழிப்​புத்​துறை டிஜிபி-​யாக இருந்த அபய்குமார் கடந்த 31-ம் தேதி​யுடன் பணி ஓய்வுபெற்​றார். முன்​ன​தாக அவருக்​கான பணி நிறைவு பாராட்டு விழா சென்​னை​யில் நடைபெற்​றது. போலீஸ் அதிகாரி​கள் அவருக்கு பூங்​கொத்து கொடுத்​து, அவரது பணியை நினைவுகூர்ந்து பாராட்​டினர்.

மனநிறைவுடன் ஓய்​வு​பெறு​வ​தாக அப்​போது அபய் குமார்சிங் தெரி​வித்தார். அவர் பணி ஓய்​வு​பெற்ற நிலை​யில் அந்த இடத்​துக்கு அதி​காரி நியமிக்​கப்​பட​வில்​லை.

இதையடுத்​து, லஞ்ச ஒழிப்​புத் துறை ஐஜி​யாக உள்ள துரை குமாருக்​கு, அப்​பிரிவு டிஜிபி​யாக கூடு​தல் பொறுப்பு வழங்​கப்பட்​டுள்​ளது. அடுத்த அதி​காரி நியமிக்​கப்​படும் வரை துரைகுமார் கூடு​தலாக அந்த பொறுப்பை கவனித்​துக் கொள்​வார் என உள்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்​பு டிஜிபி ஓய்​வு​பெற்ற நிலை​யில் ஐஜி துரைகுமாருக்கு கூடு​தல் பொறுப்பு வழங்கல்
40 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்தி டாஸ்​மாக் பணி​யாளர்​கள் 26-ல் வேலைநிறுத்​தம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in