ஏஎன்எஸ். பிரசாத்துக்கு மீண்டும் பாஜக செய்தித் தொடர்பாளர் பொறுப்பு

ஏஎன்எஸ். பிரசாத்துக்கு மீண்டும் பாஜக செய்தித் தொடர்பாளர் பொறுப்பு
Updated on
1 min read

சென்னை: ​பாஜக பொறுப்​பு​களில் இருந்து ஏஎன்​எஸ். பிர​சாத் நீக்​கப்​பட்ட உத்​தரவு ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது. அவருக்கு மீண்​டும் மாநில செய்​தித் தொடர்​பாளர் பொறுப்பை வழங்கி நயி​னார் நாகேந்​திரன் உத்​தர​விட்​டுள்​ளார்.

சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி என்​டிஏ கூட்​ட​ணி​யில் இணைவது தொடர்​பாக தவெக​விடம் திரைமறை​வில் பேச்​சு​வார்த்தை நடந்து வரு​வ​தாக சமீபத்​தில் தகவல்​கள் வெளி​யாகின. இந்த சூழலில், தமிழக பாஜக செய்​தித் தொடர்​பாளர் ஏஎன்​எஸ். பிர​சாத் ஓர் அறிக்கை வெளி​யிட்​டார்.

‘தமிழக அரசி​யலில் விஜய் ஒரு மாபெரும் சரித்​திர நாயக​னாக உரு​வெடுக்​க​வும், மக்​கள் நல அரசி​யலை முன்​னெடுக்​க​வும் இதுவே சரி​யான தருணம். என்​டிஏ கூட்​ட​ணிக்கு வந்​தால், அவருக்கு தகு​தி​யான இடமும், உரிய மரி​யாதை​யும் நிச்​ச​யம் வழங்​கப்​படும்’ என்று அந்த அறிக்​கை​யில் அவர் தெரி​வித்​திருந்​தார். கட்​சி​யின் மேலிட அனு​மதி இன்​றி, தன்​னிச்​சை​யாக விஜய்க்கு அவர் அழைப்பு விடுத்​தது சலசலப்பை ஏற்​படுத்​தி​யது.

இதைத் தொடர்ந்​து, கட்​சி​யின் கட்​டுப்​பாட்டை மீறிய​தாக, அனைத்​துப் பொறுப்​பு​களில் இருந்​தும் ஏஎன்​எஸ். பிர​சாத்தை நீக்கி மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் உத்​தர​விட்​டார். இந்​நிலை​யில், அந்த ஒழுங்கு நடவடிக்​கையை ரத்து செய்​து, அவருக்கு மீண்​டும் மாநில செய்​தித் தொடர்​பாளர் பொறுப்பை வழங்கி நயி​னார் நாகேந்​திரன் உத்​தர​விட்​டுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறி​விப்​பில், ‘பாஜக மாநில செய்​தித் தொடர்​பாளர் ஏஎன்​எஸ். பிர​சாத், கட்​சி​யின் ஒழுங்கு நடவடிக்​கைக்கு உள்​ளான​தால் பொறுப்​பில் இருந்து நீக்​கப்​பட்​டிருந்​தார். தற்​போது அவர் மீதான நீக்​கம் ரத்து செய்​யப்​படு​கிறது. அவர் மீண்​டும் கட்சி மற்​றும் தேர்​தல் பணி​களை மிக​வும் சிறப்​பான முறை​யில் மேற்​கொள்​ளு​மாறு கேட்​டுக் கொள்​கிறேன்’ என்று தெரி​வித்​துள்​ளார்​.

ஏஎன்எஸ். பிரசாத்துக்கு மீண்டும் பாஜக செய்தித் தொடர்பாளர் பொறுப்பு
“துரோகத்துக்கு உருவம் கொடுத்தால் அது பழனிசாமிதான்” - விருதுநகரில் ஸ்டாலின் விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in