திமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை திரும்ப பெறவேண்டும்: தமிழக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

திமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை திரும்ப பெறவேண்டும்: தமிழக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை வெளி​யிட்ட சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: தமிழக மின்​வாரி​யத்​துக்கு மின்​மாற்றி (டி​ரான்​ஸ்​பார்​மர்) கொள்​முதல் செய்​த​தில் ரூ.397 கோடி அளவுக்கு ஊழல் நடந்​த​தாக புகார் எழுந்​தது.

இதுகுறித்து சிபிஐ விசா​ரணை நடத்த சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. இந்​நிலை​யில், இந்த தீர்ப்பை எதிர்த்​து, அரசு நிறு​வன​மான மின்​சார வாரி​யம் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​துள்​ளது.

ஊழலைத் தடுப்​ப​தில் புதிய அரசுக்கு உண்​மை​யான அக்​கறை இருந்​தால், சிபிஐ விசா​ரணையை முடக்​கும் நோக்​கில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள மேல்​முறை​யீட்டு மனுவை உடனே திரும்​பப் பெற வேண்​டும்.

அதே​போல, கே.என்​.நேரு உள்​ளிட்​டோர் மீதான பல்​வேறு ஊழல் புகார்​கள் குறித்து லஞ்ச ஒழிப்​புத் துறை இன்​னும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்​யாமல் நிலு​வை​யில் வைத்​துள்​ளது. அவற்​றின் மீது தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

திமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை திரும்ப பெறவேண்டும்: தமிழக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்
முதல்வரின் நேரடி கண்காணிப்பில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ செயல்படும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in