அண்ணாமலை பல்கலை. ஊழியர்கள் வேலைநிறுத்தம்

அண்ணாமலை பல்கலை. ஊழியர்கள் வேலைநிறுத்தம்
Updated on
1 min read

கடலூர்: சிதம்​பரம் அண்​ணா​மலைப் பல்​கலைக்​கழக ஆசிரியர், ஊழியர் மற்​றும் ஓய்​வூ​தி​யர் சங்​கங்​களின் கூட்டு நடவடிக்​கைக் குழு​வினர் கடந்த இரண்டு ஆண்​டு​களில் ஓய்​வு​பெற்ற ஆசிரியர், ஊழியர்​களுக்கு உடனடி​யாக ஓய்​வூ​தி​யம் வழங்க வேண்​டும் என்​பது உள்​ளிட்ட கோரிக்​கை​களை வலி​யுறுத்தி போ​ராடி வரு​கின்​ற​னர்.

இந்நிலையில் பல்​கலைக்​கழ​க ஆட்​சிக்​குழு மற்றும் நிதிக்​குழு, 125 பணி நிலை​களைக் கொண்ட ஊழியர்​களுக்கு மறுஊ​திய நிர்​ண​யம் செய்​யப்​பட்ட பின்​னரே ஓய்​வூ​தி​யம் வழங்க வேண்​டும் என பரிந்​துரைத்​துள்​ளது. இதனால் அதிருப்​தி​யடைந்த ஆசிரியர், ஊழியர் மற்றும் ஓய்​வூ​தி​யர் சங்​க கூட்டு நடவடிக்​கைக் குழு​ நாளை (செப்.15) முதல் காலவரையற்​ற வேலைநிறுத்​தப்​ போ​ராட்​டத்​தை தொடங்​கு​வ​தாக அறி​வித்​துள்​ளது.

அண்ணாமலை பல்கலை. ஊழியர்கள் வேலைநிறுத்தம்
“தேசிய அளவில் வளர்ந்த விசிகவை பார்த்து சிலருக்கு பொறாமை” - திருமாவளவன் வருத்தம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in