பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான மாரத்தானில் பங்கேற்று ஓடிய அண்ணாமலை

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான மாரத்தானில் பங்கேற்று ஓடிய அண்ணாமலை
Updated on: 
1 min read

திருப்பூர்: ​திருப்​பூர் மாவட்​டம் அவி​நாசி மற்​றும் அலகுமலை​யில் ‘வீ த லீடர்​ஸ்’ அமைப்பு சார்​பில் நடை​பெற்ற மாரத்​தான் போட்​டிகளில் அண்​ணா​மலை பங்​கேற்று ஓடி​னார்.

சர்​வ​தேச பெண் குழந்​தைகள் தினத்தை முன்​னிட்​டு, பெண்​கள் வலிமை மற்​றும் ஆரோக்​கிய விழிப்​புணர்வு மாரத்​தான் போட்டி அவி​நாசி​யில் நேற்று நடை​பெற்​றது. இந்​தப் போட்​டியை ‘வீ த லீடர்​ஸ்’ அமைப்​பின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் அண்​ணா​மலை தொடங்கி வைத்​து, ஓட்​டம் முழு​வதும் பங்​கேற்​றார். போட்​டி​யில் பெண் குழந்​தைகள் மற்​றும் பெண்​கள் உட்பட சுமார் 9,300 பேர் கலந்து கொண்டு ஓடி​னார்.

அவி​நாசி தேவ​ராயன்​பாளை​யம் பிரி​வில் தொடங்​கிய மாரத்​தான் ஓட்​டம் மங்​கலம் செல்​லும் புறவழிச்​சாலை, அவி​நாசி கிழக்கு வீதி, புதிய பேருந்து நிலை​யம், திருப்​பூர் சாலை வழி​யாக அவி​நாசி புறவழிச்​சாலை​யில் நிறைவடைந்​தது. 10 கிமீ, 6 கிமீ, 3 கிமீ, ஒரு கிமீ என 4 பிரி​வு​களில் போட்டி நடை​பெற்​றது. வெற்றி பெற்ற பெண்​களுக்கு பரிசுகள் வழங்​கப்​பட்​டன. அதே​போல, திருப்​பூர் அலகுமலை​யில் நடந்த மாரத்​தான் ஓட்​டத்​தை​யும் அண்​ணா​மலை தொடங்​கி​வைத்​தார். சாதனை பெண்​களுக்கு விருதுகளை​யும் அவர் வழங்​கி​னார்.

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான மாரத்தானில் பங்கேற்று ஓடிய அண்ணாமலை
ரியாத் விமான நிலைய தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு: 11 இந்தியர்கள் உட்பட 300 பேர் படுகாயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in