டெல்லியில் அமித் ஷா, ஜெ.பி.நட்டாவுடன் அண்ணாமலை சந்திப்பு

டெல்லியில் அமித் ஷா, ஜெ.பி.நட்டாவுடன் அண்ணாமலை சந்திப்பு
Updated on
1 min read

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த நிலையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.

ஓபிஎஸ் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இதையடுத்து சென்னை திரும்பிய ஓபிஎஸ், தமிழக அரசியல் சூழ்நிலையைபற்றி பேசியதாக, தெரிவித்தார்.

இந்நிலையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை டெல்லியில் அமித் ஷாவின் இல்லத்தில் அவரை நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, கூட்டணி விவகாரம், தமிழக அரசியல் சூழல், எஸ்.ஐ.ஆர்., ஓபிஎஸ், தினகரனை கூட்டணியில் சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அண்ணாமலை பேசியதாக தெரிகிறது.

கூட்டணியில் சேர்க்க முயற்சி ஓபிஎஸ், டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்க அண்ணாமலை முழு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று வந்த மறு நாளே அண்ணாமலையும் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.இந்த சந்திப்பின்போது, ஜெ.பி.நட்டா, பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

டெல்லியில் அமித் ஷா, ஜெ.பி.நட்டாவுடன் அண்ணாமலை சந்திப்பு
பாமக விவகாரத்தில் இருதரப்பும் உரிமை கோரினால் மாம்பழம் சின்னம் முடக்கப்படும்: தேர்தல் ஆணையம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in