குமரி முதல் தூத்துக்குடி வரையிலான கடற்கரையை தூய்மையாக்கும் பணியை தொடங்கி வைத்தார் அண்ணாமலை

பொது சேவைக்கு வர இளைஞர்களுக்கு அழைப்பு
கன்னியாகுமரியில்  ‘வீ த லீடர்ஸ்’  அமைப்பின் முதன்மை சேவகர் அண்ணாமலை கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரியில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் முதன்மை சேவகர் அண்ணாமலை கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.

Updated on
1 min read

நாகர்கோவில்: எந்த எதிர்​பார்ப்​பு​களும் இன்றி இளைஞர்​கள் பொது சேவைக்கு வர வேண்​டும் என வீ த லீடர்ஸ் இயக்க முதன்​மைச் சேவகர் அண்​ணா​மலை வலி​யுறுத்தி உள்​ளார்.

கன்​னி​யாகுமரி முதல் தூத்​துக்​குடி வரை 175 கிலோ மீட்​டர் நீள​முள்ள கடற்​கரையை தூய்​மைப்​படுத்​தும் பணியை வீ த லீடர்ஸ் இயக்​கம் நேற்று தொடங்​கியது. கன்​னி​யாகுமரி​யில் அண்​ணா​மலை தொடங்கி வைத்​து, கடற்​கரை​யில் தூய்​மைப் பணி மேற்​கொண்​டார்.

பின்​னர் அவர் பேசி​ய​தாவது: தமிழகத்​தின் மொத்த கடற்​கரை நீளம் 1,075 கிலோ மீட்​டர். இதில் 175 கிலோ மீட்​டர் தூர கடற்​கரையை சுத்​தம் செய்ய முன்​வந்​துள்​ளோம். குமரி​யில் தொடங்கி தூத்​துக்​குடி வரை இந்த பணி நடை​பெறும். ஒரு ஆண்​டில் 175 கிலோ மீட்​டர் கடற்​கரை பகுதி முழு​வதும் சுத்​த​மாக இருக்க வேண்​டும் என்​பது நம்​முடைய நோக்​கம்.

இந்​தி​யா​வில் ஒரு ஆண்டுக்கு நாம் போடக்​கூடிய பிளாஸ்டிக் குப்​பைகள் மட்​டும் 26 ஆயிரம் டன். அதில் 16 ஆயிரம் டன் மட்​டும்தான் நாம் எடுக்​கிறோம்.

இதனால் நிலத்​தடி நீர் எவ்​வளவு ஆழமாக போயிருக்​கும் என்று சிந்​திக்க வேண்​டும். நம்​முடைய காலத்​துக்கு பின்​பும் இந்த கடற்​கரை இருக்க வேண்​டும். இயற்கை சுத்​த​மாக இருக்க வேண்​டும். எந்த எதிர்​பார்ப்​பும் இல்​லாமல் இளைஞர்​கள் இந்த பணியை தொடர்ந்து மேற்​கொள்ள வேண்​டும்.

புகைப்​படம் இல்​லாத ஒரு இயக்​க​மாக நாம் மாற முயற்சி செய்ய வேண்​டும். அது நம்​முடைய முதல் குறிக்​கோள். வேலை​யில் மட்​டும்​தான் கண்​ணும் கருத்​து​மாக இருப்​போம். ஒரு புகைப்​படம், செல்பி எடுத்​து, நான் வேலை செஞ்​சேன் என்று பெருமை தேடு​வதற்​காக வீ த லீடர்​ஸில் யாரும் இருக்​க​மாட்​டார்​கள். ஓர் ஆண்டு காலத்​தில் கொஞ்​சம் கொஞ்​ச​மாக எல்​லோரும் பக்​கு​வப்​பட்​டு, நாம் எல்​லோருமே தலை​வர்​களாக மாறு​வோம். நாமும் மாற வேண்​டும், மற்​றவர்​களை மாற்ற வேண்​டும். அதனால்​தான் மாறு​வோம் மாற்​று​வோம் என்று சொல்​கிறோம். இவ்​வாறு அண்​ணா​மலை பேசி​னார்.

<div class="paragraphs"><p>கன்னியாகுமரியில்  ‘வீ த லீடர்ஸ்’  அமைப்பின் முதன்மை சேவகர் அண்ணாமலை கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.</p></div>
காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் முடிவால் தமிழகத்துக்கு பெரும் பின்னடைவு: திமுக

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in