செய்தி சேனல்கள் நீக்கம்: அண்ணாமலை விமர்சனம்

செய்தி சேனல்கள் நீக்கம்: அண்ணாமலை விமர்சனம்
Updated on
1 min read

சென்னை: தமிழக அரசு கேபிள் ஒளிபரப்​பில் இருந்து 3 முன்​னணி செய்தி சேனல்​கள் நீக்​கப்​பட்​டுள்​ள​தாக சமூக வலை​தளங்​களில் தகவல் பரவியது. இது தொடர்​பாக தமிழக அரசின் உண்மை சரி​பார்ப்​பகம் விளக்​கம் அளித்​தது.

அதில், ‘தொழில்​நுட்ப பிரச்​சினை காரண​மாகவே 3 சேனல்​களை தற்​காலிக​மாக ஒளிபரப்பு செய்ய முடிய​வில்​லை. விரை​வில் இப்​பிரச்​சினை சரிசெய்​யப்​படும்’ என்று தெரிவிக்​கப்​பட்​டது.

இந்த விளக்​கத்தை அண்​ணா​மலை தனது எக்ஸ் வலை​தளப் பதி​வில் கடுமை​யாக விமர்​சித்​துள்​ளார். குறிப்​பிட்ட 3 ஊடகங்​களின் ஒளிபரப்​பும் தடைபட்​டுள்​ளது என்​பதை ஒப்​புக்​கொண்​டதற்கு நன்​றி.

ஆனால், தவெக அரசின் அவலத்தை வெளிப் ​படுத்​தும் ஊடகங்​களுக்கு மட்​டும் செட்​டாப் பாக்​ஸில் எப்​படி தொழில்​நுட்ப பிரச்​சினை​கள் வரும்.

பொய், புரட்​டு​களை மக்​களிடம் உண்மை என நம்​பவைக்க, கடந்த ஆட்​சி​யில் உரு​வாக்​கப்​பட்ட இந்த உண்மை சரி​பார்ப்பக வலைதள கணக்​கு, தற்​போதும் அதே வேலை​யைத்​தான் தொடர்​கிறது என்று​ தெரி​வித்​துள்​ளார்​.

செய்தி சேனல்கள் நீக்கம்: அண்ணாமலை விமர்சனம்
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டப் பணியாளர்களின் ஊதியம் ரூ.5 கோடி விடுவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in