

சென்னை: பிரபல நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் இன்று (ஜூன் 27) காலை காலமானார். அவரது மறைவுக்கு ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
“சிறந்த இயக்குநரும், நடிகரும், இந்திய அளவில் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவருமான, கே.பாக்யராஜ், உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
தன்னுடைய திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருந்தவர். எளிய, பண்பான மனிதராகத் திகழ்ந்தவர்.
அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!” என்று எக்ஸ் தளத்தில் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.