கூட்டுறவு அரசு பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வுக்கு ரூ.15 லட்சம் வரை பணம் பெறுவதாக புகார்: அண்ணாமலை குற்றச்சாட்டு

கூட்டுறவு அரசு பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வுக்கு ரூ.15 லட்சம் வரை பணம் பெறுவதாக புகார்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் இன்று நடைபெறும் கூட்டுறவு அரசு பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வுக்கு ரூ.15 லட்சம் வரை பணம் பெறுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் லட்சக்கணக் கான இளைஞர்கள் அரசுப் பணிக்காக பல ஆண்டுகள் தங்களை அர்ப்பணித்து கடுமையாக உழைத்துக் கொண்டிருக்க, திமுக அமைச்சர்கள் அரசுப் பணிகளை விற்பனை செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கெனவே அமைச்சர் கே.என்.நேருவின் துறையில் பணி நியமனத்துக்கு பணம் வாங்கியதாக புகார் எழுந்த நிலையில், நாளை (இன்று) நடைபெறும் கூட்டுறவு அரசு பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வில் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்களே என்னை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளனர். முன்னாள் மதுவிலக்குத் துறை அமைச்சர் இதுபோல், அரசுப் பணி நியமனத்துக்கு பணம் வாங்கியதால்தான், ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார். அமைச்சர் பதவியையும் இழந்தார்.

இதை திமுக அமைச்சர்கள் மறந்து விட்டார்களா அல்லது, வந்தவரை லாபம் என்று வாரிச் சுருட்டலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களா? திமுக அமைச்சர் பெரியகருப்பன், தனது பொறுப்பை உணர்ந்து கூட்டுறவு அரசுப் பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: அதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கோவை செம்மொழி பூங்கா திறப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் திறப்பு விழா நடைபெற்று உள்ளது. அரசு விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்பது கூட தெரியவில்லை.

இனியாவது, உதட்டளவில் தமிழ்ப் பற்று பேசாமல், உண்மையாகவே தமிழ் மொழி மீது அக்கறை காட்டும்படி முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கூட்டுறவு அரசு பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வுக்கு ரூ.15 லட்சம் வரை பணம் பெறுவதாக புகார்: அண்ணாமலை குற்றச்சாட்டு
‘லுக் அவுட்’ நோட்டீஸை திரும்ப பெறக் கோரி செந்தில் பாலாஜியின் சகோதரர் வழக்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in