அண்ணா பல்கலை. முறைகேடு: டீனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பேராசிரியரின் இடைநீக்கத்துக்கு தடை

அண்ணா பல்கலை. முறைகேடு: டீனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பேராசிரியரின் இடைநீக்கத்துக்கு தடை
Updated on: 
1 min read

சென்னை: அண்ணா பல்​கலைக்​கழக கோவை வளாகத்​தில் இணைப் பேராசிரிய​ராக பணி​யாற்றி வரும் முனை​வர் ஜெ.வெங்​கடேஷ் தனது இடைநீக்​கம் மற்​றும் தனக்கு பிறப்​பிக்​கப்​பட்ட குற்​றக் குறிப்​பாணையை எதிர்த்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கு நீதிபதி மும்​முனேனி சுதீர் குமார் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் அசன்​முகமது ஜின்​னா, “மனு​தா​ரரின் பணி அனுபவச் சான்​றிதழ்​கள் கடந்த 2008-ம் ஆண்டு அண்ணா பல்​கலைக்​கழக நிர்​வாகத்​தால் சரி​பார்க்​கப்​பட்ட பின்​னரே அவருக்கு இணைப் பேராசிரிய​ராக பணி ஆணை வழங்​கப்​பட்​டது.

அதன்​பிறகும் கோவை அண்ணா பல்​கலைக்​கழகம், சென்​னை​யுடன் இணைக்​கப்​பட்​ட​போதும் பல்​வேறு கால​கட்​டங்​களில் மனு​தா​ரரின் பணிப்​ப​திவேடு​கள் சரி​பார்க்​கப்​பட்​டுள்​ளன.

அண்ணா பல்​கலைக்​கழக முறை​கேடு​கள் தொடர்​பாக​வும், பல்​கலைக்​கழக டீன் முனை​வர் எம். சரவணக்​கு​மாருக்கு எதி​ராக உரிமை​யியல் மற்​றும் குற்​ற​வியல் ரீதி​யாக வழக்கு தொடர்ந்த நிலை​யில் தற்​போது பழி​வாங்​கும் நோக்​கத்​தில் சில குறிப்​பிட்ட ஆவணங்​களை மட்​டும் சரி​பார்ப்​புக்கு அனுப்பி அதன்​மூலம் மனு​தா​ரருக்கு குற்ற குறிப்​பாணை வழங்கி இடைநீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

பல்​கலைக்​கழகத்​தின் இந்த நடவடிக்கை முற்​றி​லும் தன்​னிச்​சை​யானது” என வாதிட்​டார். இதற்கு அண்ணா பல்​கலைக்​கழக நிர்​வாகம் தரப்​பில் ஆட்​சேபம் தெரிவிக்​கப்​பட்​டது.

இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி மும்​முனேனி சுதீர் குமார், மனு​தா​ரரின் இடைநீக்​கம் மற்​றும் குற்​றச்​சாட்டு குறிப்​பாணை தொடர்​பான ஒழுங்கு நடவடிக்​கைகளுக்கு இடைக்​காலத் தடை வி​தித்​து உத்​தர​விட்​டுள்​ளார்​.

அண்ணா பல்கலை. முறைகேடு: டீனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பேராசிரியரின் இடைநீக்கத்துக்கு தடை
திருடப்பட்ட பைக்கை திரும்ப ஒப்படைக்க ஜிபே-யில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ, காவலர் சஸ்பெண்ட்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in