சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் பட்டியலில் இருந்து சாதியை தேர்ந்தெடுக்கும் முறையை கடைபிடிக்க வேண்டும் - பிரதமருக்கு அன்புமணி கடிதம்

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

Updated on
1 min read

சென்னை: சாதி​வாரி மக்கள்தொகை கணக்​கெடுப்​பின் போது சாதி​கள் பட்​டியலில் இருந்து சாதியை தேர்ந்​தெடுத்து நிரப்​பும் முறையை மத்​திய அரசு கடைபிடிக்க வேண்​டும் என்று பிரதமரிடம் பாமக தலை​வர் அன்​புமணி கோரிக்கை வைத்​துள்​ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழு​திய கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: சாதி​வாரி மக்கள்தொகை கணக்​கெடுப்​பு பணி​யின் போது, சாதி என்ற கேள்விக்​கான பதிலை குறிப்​பிடும் பகு​தியை காலி​யாக விட்டு விடு​வதென்​றும், அந்த இடத்​தில் மக்​கள் குறிப்​பிடும் சாதி​யின் பெயரை அப்​படியே பதிவு செய்​வதென்​றும் இந்​தி​யத் தலை​மைப் பதி​வாளர் முடிவு செய்​திருப்​ப​தாக ஊடகங்​களில் செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன.

இந்த முறை​யில் மக்​களின் சாதி விவரம் சேகரிக்​கப்​பட்​டால், நிறைய சிக்​கல்​கள் ஏற்​படும். நாடு முழு​வதும் ஒவ்​வொரு சாதி​யிலும் பல உட்​பிரிவு​கள் உள்​ளன. அந்த உட்​பிரிவு​களின் பெயர்​கள் அரசால் பயன்​படுத்​தப்​படும் சாதி​களின் பட்​டியலில் இடம் பெற்​றிருக்​காது.

இத்​தகைய சூழலில், மக்​கள் தெரிவிக்​கும் சாதி​யின் பெயரை அப்​படியே நிரப்​பி, அது உட்​பிரி​வின் பெய​ராக இருந்​தால், அது அரசின் பட்​டியலில் உள்ள சாதி​களை விட பல மடங்கு சாதி​கள் இருப்​ப​தாக கணக்​கில் காட்​டப்​படும். இது சரிசெய்ய முடி​யாத குழப்​பத்தை உண்​டாக்​கி, இந்​தக் கணக்​கெடுப்​பின் தரவு​களை பயன்​படுத்த முடி​யாத நிலையை உரு​வாக்​கி​விடும்.

இந்த சிக்​கலுக்​கான தீர்வு மிக​வும் எளி​தானது. இந்​தி​யா​வில் என்​னென்ன சாதி​கள் உள்ளன என்​பது குறித்த பட்​டியல் மத்​திய அரசிட​மும், மாநில அரசுகளிட​மும் உள்​ளன.

சாதி​வாரி மக்​கள்​தொகை கணக்​கெடுப்பு தேசிய அளவில் மத்​திய அரசால் நடத்​தப்​படும் நிலை​யில், அந்​தப் பட்​டியலை சாதி​வாரி மக்​கள்​தொகை கணக்​கெடுப்​புக்​கான செயலி​யின் மென்​பொருளில் இணைத்​து, அந்​தப் பட்​டியலில் இருந்து மக்​கள் தங்​கள் சாதியை தேர்வு செய்​யும் முறையை பின்​பற்​று​வது தான் சரி​யான தீர்​வாகும். இவ்​வாறு கடிதத்​தில்​ கூறப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>அன்புமணி ராமதாஸ்</p></div>
தமிழகத்தில் 1,577 ரவுடிகள் கைது: போலீஸார் அதிரடி நடவடிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in