தமிழகத்தில் 1,577 ரவுடிகள் கைது: போலீஸார் அதிரடி நடவடிக்கை

தமிழகத்தில் 1,577 ரவுடிகள் கைது: போலீஸார் அதிரடி நடவடிக்கை
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் போலீ​ஸார் மேற்​கொண்ட சிறப்பு அதிரடி நடவடிக்​கை​யில் 1,577 ரவுடிகள் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

குற்​றச் செயல்​களை முன் கூட்​டியே தடுக்​கும் வகை​யில் ரவுடிகளுக்கு எதி​ரான நடவடிக்​கையை டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால் தீவிரப்​படுத்தி உள்​ளார். அந்த வகை​யில் மாநிலம் முழு​வதும் கடந்த மாதம் 29-ம் தேதி முதல் கடந்த 11-ம் தேதி வரை சிறப்பு கண்​காணிப்பு நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டது.

இதில் ரவுடிகள் மற்​றும் குற்​றப் பின்​னணி கொண்​ட​வர்​கள் என மொத்​தம் 52,279 பேர் சோதனைக்கு உட்​படுத்​தப்​பட்​டனர். அவர்​களில் குற்​றச் செயல்​களில் ஈடு​பட்​ட​தாக கண்​டறியப்​பட்ட 1,577 பேர் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

மேலும், இதே கால​கட்​டத்​தில் பிணை​யில் (ஜாமீன்) வெளிவர முடி​யாத பிடி​யாணை​களை நிறைவேற்​றும் வகை​யில் சிறப்பு நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டது.

இதில், ரவுடிகள், குற்​றப் பின்​னணி கொண்​ட​வர்​கள் என 3,288 பேர் மீதான பிடி​யாணை​கள் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளன. நிலு​வை​யில் உள்ள பிணை​யில் வெளிவர முடி​யாத பிடி​யாணை​களை நிறைவேற்​றவும், தலைமறை​வாக உள்ள ரவுடிகளை கைது செய்​வதற்​கும் போலீ​ஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்​நிலை​யில் வழக்​க​மான சோதனை​கள், தீவிர கண்​காணிப்பு மூலம் குற்​றச் செயல்​களை முன்​கூட்​டியே தடுத்​து, சட்​டம்​-ஒழுங்கை சிறப்​பாக பராமரிக்க வேண்​டும் என்​று மாநகர காவல் ஆணை​யர்​கள், மாவட்ட எஸ்​.பி.க்​கள் மற்​றும் சிறப்பு பிரிவு அதி​காரி​களுக்​கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 1,577 ரவுடிகள் கைது: போலீஸார் அதிரடி நடவடிக்கை
எம்எல்ஏக்கள் பேசுவதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதி: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in