உணவுத் துறையை மேம்படுத்த அரசு தீவிர நடவடிக்கை: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

உணவுத் துறையை மேம்படுத்த அரசு தீவிர நடவடிக்கை: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் உணவுத் துறையை மேம்​படுத்த தீவிர நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​வ​தாக அமைச்​சர் டி.ஆர்.பி.ராஜா தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து நேற்று அவர் தனது எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதிவு: உணவுத் துறையை உண்​மை​யான பொருளா​தார வளர்ச்​சிக்​கான இயந்​திர​மாக உலகம் அங்​கீகரிக்க வேண்​டும் என்​பதே அரசின் நோக்​க​மாகும். அதற்கு நிதி​யுத​வி, பணி​யாளர்​கள், ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாடு, உணவுத்​துறை விரி​வாக்​கம் ஆகியவை தேவைப்​படு​கிறது. மக்​களால் அதி​கம் விரும்​பப்​படும் உணவு நிறு​வனங்​களை ​கூட சிலர் ஏளனம் செய்​கின்​றனர். இந்​நிலையை மாற்​றும் வகை​யில், தற்​போது கோவை​யில் சில புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் போடப்​பட்​டுள்​ளன.

அவை வளர்ச்சி மிகுந்த தொழில்​துறை அளவி​லான உணவு உற்​பத்​தி, குளிர்​ப​தனச் சங்​கி​லிகள், ஏற்​றும​தி, உணவு விற்​பனை​யில் உலகளா​விய சில்​லறை வணிக விரி​வாக்​கம் மற்​றும் ஆயிரக்​கணக்​கான புதிய வேலை​வாய்ப்​பு​களுக் கான ஒப்​பந்​தங்​களாகும்.

நம் மாநிலத்​தில் உள்ள நிறு​வனங்​கள்​தான் நமக்கு உணவளிக்​கின்​றன, வேலை​வாய்ப்​பைத் தரு​கின்​றன. தமிழகத்​தின் அடை​யாளத்தை உலகம் முழு​வதும் கொண்டு செல்​கின்​றன. அவர்​களுக்கு ஒற்​றைச்​ சாளர முறை​யில் அனு​மதி மற்​றும் ஏற்​றுமதி செய்​வதற்கு ஆதரவு தர வேண்​டும். நம் மாநில உணவு நிறு​வனங்​களின் வளர்ச்​சிக்கு துணை​யாக இருப்​பதே வலு​வான தமிழகத்தை கட்​டமைக்​கும். எனவே, ஒட்​டு மொத்த உணவுத் துறைக்​கும் உதவ கூடு​தலாக உழைப்போம். நமது மாநில நிறு​வனங்​களின் வளர்ச்​சிக்​கான இன்​னும் பல்​வேறு திட்​டங்​கள் வரவுள்​ளன. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

உணவுத் துறையை மேம்படுத்த அரசு தீவிர நடவடிக்கை: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் கோரிய வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in