இளைஞர்கள், சிறுவர்கள் தவறான வழிகளில் செல்வதை தடுக்கும் வகையில் விளையாட்டை ஊக்குவிக்க அன்புமணி வலியுறுத்தல்

இளைஞர்கள், சிறுவர்கள் தவறான வழிகளில் செல்வதை தடுக்கும் வகையில் விளையாட்டை ஊக்குவிக்க அன்புமணி வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: இளைஞர்​கள், சிறு​வர்​கள் தவறான வழிகளில் செல்​வதை தடுக்க அனைத்து கிராமங்​கள், நகர்ப்​பகு​தி​களில் விளை​யாட்டு ஊக்​குவிக்​கப்பட வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்புமணி தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் கிட்​டத்​தட்ட அனைத்து பகு​தி​களி​லும் இளைஞர்​களும், சிறு​வர்​களும் பெரு​மள​வில் மது மற்​றும் போதைக்கு ஆளாகி​யுள்ள நிலை​யில், அந்த தீய வழக்​கங்​களில் இருந்து அவர்​களை மீட்​டெடுக்க மரபு​களை கடந்த வழி​முறை​களை​யும் பின்​பற்​றி​யாக வேண்​டும்.

இளைய சமு​தா​யத்தை மீண்​டும் சரி​யான பாதை​யில் வழி நடத்தி செல்ல சிறந்த தீர்வு விளை​யாட்டு தான். இதை கருத்​தில் கொண்டு அனைத்து கிராமங்​களி​லும், நகர்ப்​பகு​தி​களி​லும் விளை​யாட்டு ஊக்கு விக்​கப்பட வேண்​டும்.

அனைத்து கிராமங்​களி​லும் தற்​காலிக​மாக​வாவது விளை​யாட்டு திடல்​கள் ஏற்​பாடு செய்​யப்பட வேண்​டும். சிறு​வர்​களும், இளைஞர்​களும் அதில் விளை​யாட விளை​யாட்டு கருவி​கள் வாங்கித் தரப்பட வேண்​டும்.

பள்​ளி​களில் விளை​யாட்டு பாட வேளை​கள் கட்​டாய​மாக்​கப்பட வேண்​டும். இவை அனைத்​துக்​கும் மேலாக ஆண்​டுக்கு ஒரு​முறை வட்ட, மாவட்ட அளவில் போட்​டிகள் நடத்​தப்பட வேண்​டும். இதற்​காக உள்​ளாட்சி அமைப்​பு​களுக்கு தனி நிதி ஒதுக்​கீடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

கோயிலை இடிக்​கக்​கூ​டாது

அன்​புமணி வெளி​யிட்ட மற்​றொரு அறிக்​கை​யில், “கடலூர் மாவட்​டம் நெய்​வேலியை அடுத்​துள்ள தெற்கு மேலூர் கிராமத்​தில் அமைந்​துள்ள அங்​காளம்​மன் - பாவாடை​ராயன் கோயிலை, நிலக்​கரி சுரங்க விரி​வாக்​கத்​துக்​காக இடிக்க என்​என்சி நிறு​வனம் முயற்சி மேற்​கொண்டு வரு​கிறது.

லட்​சக்​கணக்​கான மக்​களின் இறை நம்​பிக்​கை​யாக திகழும் கோயிலை இடிக்க துடிப்​பது கண்​டிக்​கத்​தக்​கது. அங்​காளம்​மன் - பாவாடை​ராயன் கோயில் அதே பகு​தி​யில் நீடிப்​ப​தால் என்​எல்​சிக்கு எந்த பாதிப்​பும் ஏற்​படப் போவ​தில்​லை.

அதே நேரத்​தில் அந்த கோயில் இடிக்​கப்​பட்​டால் லட்​சக்​கணக்​கான மக்​களின் இறை நம்​பிக்கை பாதிக்​கப்​படும். இவற்றை கருத்​தில் கொண்டு தெற்கு மேலூர் அங்​காளம்​மன் - பாவாடை​ராயன் கோயிலை இடிக்​கும் முடிவை என்​எல்சி நிறு​வனம் கைவிட வேண்​டும்.

இந்த விஷ​யத்​தில் என்​எல்​சிக்கு தமிழக அரசும் போ​திய அழுத்தம் கொடுத்து இந்த முயற்​சியை தடுத்து நிறுத்த வேண்​டும்​” என்று தெரி​வித்​துள்​ளார்​.

இளைஞர்கள், சிறுவர்கள் தவறான வழிகளில் செல்வதை தடுக்கும் வகையில் விளையாட்டை ஊக்குவிக்க அன்புமணி வலியுறுத்தல்
கும்பகோணத்தை தனி மாவட்டமாக முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார்: அமைச்சர் வினோத் உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in