மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைய புதிய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைய புதிய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: மின்​னுற்​பத்​தி​யில் தன்​னிறைவு அடைய கடந்த திமுக ஆட்​சி​யில் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை. எனவே, புதிய அரசு இதில் தீவிர கவனம் செலுத்த வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்​டங்​களி​லும் கடந்த சில நாட்​களாக அறிவிக்​கப்​ப​டாத மின்​வெட்டு நில​வு​கிறது.

இதனால், மக்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், மின்​வெட்​டுக்​கான காரணங்​கள் குறித்து அரசுத் தரப்​பில் கூறப்​படும் காரணங்​களை ஏற்க முடியாது.

தமிழகத்​தின் மொத்த மின்​தேவை 22 ஆயிரம் மெகா​வாட்​டாக உயர்ந்​துள்ள நிலை​யில், 84 சதவீத மின்​சார தேவைக்​காக மத்​திய அரசு மற்​றும் தனி​யார் மின்​நிலை​யங்​களையே தமிழகம் சார்ந்​துள்​ளது.

சொந்த மின்​னுற்​பத்தி நிலை​யங்​களில் உற்​பத்தி செய்ய ஆகும் செல​வை​விட, பல மடங்கு அதிக விலை கொடுத்து தனி​யாரிடம் மின்​சா​ரம் வாங்​கப்​படு​கிறது.

தமிழ்​நாடு மின்​சார வாரி​யம் தொடர்ந்து நஷ்டம் அடைவதற்​கும், மின்​வாரி​யத்​தின் மொத்த கடன் ரூ.2.50 லட்​சம் கோடியை தாண்​டியதற்​கும் இதுவே முதன்​மைக் காரணம்.

திமுக ஆட்சி கடந்த 2021-ம் ஆண்டு பொறுப்​பேற்​ற​போது, மொத்​தம் 5,700 மெகா​வாட் திறன் கொண்ட அனல்​மின் திட்​டங்​களை அமைக்​கும் பணி​கள் பல்​வேறு நிலைகளில் இருந்​தன. திமுக அரசு நினைத்​திருந்​தால், அனைத்து மின் திட்​டப் பணி​களை​யும் நிறைவேற்றி முடித்​து, உற்​பத்​தியை தொடங்​கி​யிருக்க முடி​யும்.

ஆனால், அதி​முக ஆட்​சி​யில் 90 சதவீத பணி​கள் முடிவடைந்​திருந்த வடசென்னை 3-வது அனல் மின்​நிலை​யத்​தில் (800 மெகா​வாட்) மட்​டும்​தான் கடந்த பிப்​ர​வரி - மார்ச் மாதத்​தில் வணி​கரீ​தி​யான மின்​னுற்​பத்​தியை தொடங்​கியது.

மீத​முள்ள 4,900 மெகா​வாட் திறன் கொண்ட மின்​னுற்​பத்தி நிலை​யப் பணி​கள் இது​வரை முடிய​வில்லை. தமிழகத்​தில் தொழில், பொருளா​தார வளர்ச்சி எட்​டப்பட வேண்​டும் என்​றால், மின்​னுற்​பத்​தி​யில் தன்​னிறைவு அடைய வேண்​டும்.

கடந்த ஆட்​சி​யில் அதற்கு எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​ப​டாதநிலை​யில், புதிய அரசு இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்​தில் செயல்​படுத்​தப்​பட்டு வரும் அனல் மின் திட்​டங்​களின் தற்​போதைய நிலை என்ன. அவை எப்​போது உற்​பத்​தியை தொடங்​கும்.

புதி​தாக என்​னென்ன மின் திட்​டங்​கள் செயல்​படுத்​தப்பட உள்​ளன. கார்​பன் சமநிலையை அடைவதற்​காக தமிழகத்​தில் எப்​போது அனல் மின் உற்​பத்​தியை முடிவுக்கு கொண்​டுவர இலக்கு நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ளது என்பன உள்​ளிட்ட விவரங்​கள் அடங்​கிய வெள்ளை அறிக்​கையை தமிழக அரசு வெளி​யிட வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைய புதிய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in