16 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

16 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: பி​ரான்​ஸ், ஆஸ்​திரேலி​யாவை பின்​பற்றி இந்​தி​யா​விலும் 16 வயதுக்கு குறை​வான குழந்​தைகள் சமூக ஊடகங்​களை பயன்​படுத்​து​வதற்கு தடை விதிக்க வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை: 15 வயதுக்கு உட்​பட்ட குழந்​தைகள் சமூக ஊடகங்​களை பயன்​படுத்​து​வதற்கு தடை விதிக்​கும் சட்​டத்தை பிரான்ஸ் நாடாளு​மன்​றம் வெற்​றிகர​மாக நிறைவேற்​றி​யுள்​ளது.

குழந்​தைகளின் உடல் நலன், மனநலம் ஆகியவை சார்ந்து பார்க்​கும்​போது இது மிக​வும் அவசி​ய​மான நடவடிக்​கை​யாகும். குழந்​தைகள் சமூக ஊடகங்​களை பயன்​படுத்த முதன்​முதலில் தடை விதித்த நாடு ஆஸ்​திரேலி​யா.

கடந்த 2025-ம் ஆண்டு டிசம்​பர் மாதம் அந்​நாட்​டில் தடை நடை​முறைக்கு வந்த பிறகு கனடா, பிரேசில், இந்​தோ​னேஷியா ஆகிய நாடு​களும் குழந்​தைகளின் சமூக ஊடக பயன்​பாட்டுக்கு தடை விதித்​துள்ளன.

இங்​கிலாந்​து, ஸ்பெ​யின், கிரீஸ், ஜெர்​மனி, டென்​மார்க் உள்​ளிட்ட 50-க்​கும் மேற்​பட்ட உலக நாடு​கள் இதே போன்ற தடை குறித்து ஆராய்ந்து வரு​கின்​றன. இந்​தி​யா​வில் கர்​நாடகம், ஆந்​திர அரசுகள் குழந்​தைகள் சமூக ஊடகங்​களை பயன்​படுத்த தடை விதித்​துள்​ளன.

சமூக ஊடகங்​களுக்கு குழந்​தைகள் அடிமை​யான பிறகு விளை​யாடும் வழக்​கம் குறைந்​து​விட்​டது. கபடி, கிரிக்​கெட் உள்​ளிட்ட உடல்​திறன் சார்ந்த விளை​யாட்​டு​களை குழந்​தைகள் மறந்​து​விட்​டனர்.

இதனால் உடல் பரு​மன், வைட்​ட​மின்​-டி குறை​பாடு உள்​ளிட்ட பாதிப்​பு​களுக்கு குழந்​தைகள் ஆளாகின்​றனர். இந்த பாதிப்​பு​களை தடுப்பதற்கு சமூக ஊடகங்​களுக்கு தடை விதிப்​பது​தான் தீர்​வாகும்.

குழந்​தைகளின் உடல் நலன், மன நலம், கல்​வி ஆகிய​வற்றை கருத்​தில் கொண்டு அவர்​களை இதிலிருந்து மீட்க வேண்​டிய தேவை ஏற்​பட்​டுள்​ளது. சமூக ஊடகங்​களுக்கு குழந்​தைகள் அதி​கம் அடிமை​யாகும் நாடு​களில் ஒன்​றான இந்​தி​யா​வும் தடையை முன்​னெடுக்க வேண்​டும்.

எனவே 16 வயதுக்கு குறை​வான குழந்​தைகள் சமூக ஊடகங்​களை பயன்​படுத்​ததடை வி​திக்​கும் சட்​டத்தை மத்​திய அரசு உடனே நிறைவேற்ற வேண்​டும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

16 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
ராகுல் காந்தி ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகம் வருகை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in