அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பிய சபரீசன்

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பிய சபரீசன்
Updated on
1 min read

சென்னை: “அமைச்​சர்​கள் ஆதவ் அர்ஜுனா, நிர்​மல்​கு​மார் ஆகியோர் உண்​மைக்கு புறம்​பான கருத்​துகளை தெரி​வித்​ததற்காக, மன்​னிப்பு கேட்க வேண்டும்” என, திமுக தலை​வர் மு.க.ஸ்டா​லினின் மரு​மக​னும், அரசியல் ஆலோ​சகரு​மான சபரீசன் தரப்​பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது.

அதில் கூறப்​பட்​டுள்ளதாவது: தமிழகத்​தின் முக்​கிய கட்​சிகளில் ஒன்​றான திமுக குறித்​து, சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு முன்​பிருந்தே ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்​டு​கள் மூலம் தவெக நிர்​வாகி​கள் விமர்​சித்து வந்​துள்​ளனர்.

மு.க.ஸ்​டா​லினின் மரு​மகன் என்ற ஒரே காரணத்​துக்​காக அடிப்​படை ஆதா​ரமற்ற, உள்​நோக்​கத்​துடன் கூடிய, உண்​மைக்கு புற​மான கருத்​துகளை 2 அமைச்​சர்​களும் தெரி​வித்​துள்​ளனர்.

தனது நேர்​மை, பொது சேவை, உண்​மை​யான, நேர்​மை​யான, அர்ப்​பணிப்புமிக்க செயல்​பாடு​களின் மூலம் தனிப்​பட்ட, சமூக, தொழில் ரீதி​யான வாழ்க்கை ஆகிய​வற்​றில் களங்​கமற்ற நற்​பெயரை கொண்​டுள்ள சபரீசனுக்கு எதி​ராக, அமைச்​சர்​கள் ஆதவ் அர்​ஜுனா மற்​றும் நிர்​மல்​ கு​மார் ஆகியோர் ஜூன் 25-ம் தேதி நடந்த ஊடக சந்​திப்​பில் தெரி​வித்த கருத்​துகள் தொலைக்​காட்​சிகள் மற்​றும் சமூக ஊடகங்​களில் பரவி நற்​பெயருக்கு களங்​கம் ஏற்​படுத்தி உள்​ளன.

எனவே இரு அமைச்​சர்களும் தங்​களது கருத்துகளை உடனடி​யாக திரும்​பப்​பெறு​வதுடன், அதே ஊடகங்​கள் முன்​பாக மன்​னிப்பு கேட்க வேண்​டும். சம்​பந்​தப்​பட்ட வீடியோ பதிவு​களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்; எதிர்​காலத்​தில் சபரீசனுக்கு எதி​ராக கருத்​துகளை வெளி​யிட மாட்​டோம் என நிபந்​தனையற்ற உறு​தி​மொழியை எழுத்​துப்​பூர்​வ​மாக வழங்க வேண்​டும். இவற்றை 15 நாட்​களுக்​குள் செய்​யத் தவறி​னால் சட்​டரீ​தி​யான நடவடிக்​கையை இரு அமைச்​சர்​களும் சந்​திக்க நேரிடும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பிய சபரீசன்
கூட்டணியை வைகோ முறித்த 24 மணி நேரத்தில் திமுகவில் இணைந்த 150 மதிமுக மூத்த தலைவர்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in