“மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைக்கிறார்” - அன்புமணி கிண்டல்

அன்புமணி

அன்புமணி

Updated on
1 min read

நடக்க உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று பாமக தலைவர் அன்புமணி கிண்டலாகக் கூறினார்.

திருவண்ணாமலை சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி.ஏழுமலையை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி நேற்று பிரச்சாரம் செய்தார்.

முன்னதாக அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் திமுகவுக்கு எதிரான மிகப்பெரிய பேரலை உருவாகி உள்ளது. இன்னும் 10 தினங்களில் அது சுனாமியாக மாறி எங்கள் அணிக்கு மிகப்பெரிய வெற்றி தரும். பெண்களின் முழு ஆதரவு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உள்ளது. இந்த தேர்தலில் குறைந்தது 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை மக்களவை தேர்தல் என்று முதல்வர் ஸ்டாலின் நினைத்து கொண்டிருக்கிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் என்பது அதிமுகவுக்கும் திமுகவுக்குமான தேர்தல். மத்திய அரசை பற்றி ஏன் தேவையில்லாமல் பேசுகிறார், பிரதமர் மோடி மீது ஏன் ஸ்டாலினுக்கு பயம்? திமுக வேட்பாளர்களுக்கு ஸ்டாலின் மீது நம்பிக்கை இல்லை.

திமுகவின் தேர்தல் அறிக்கை மீது நம்பிக்கை இல்லை. திராவிட மாடல் ஆட்சியின் 5 ஆண்டு கால ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லை. ஆனால், தற்போது திமுக ரூ.8,000 டோக்கன் அளிப்பதன் மீது தான் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி.ஏழுமலை வெற்றி பெறுவார். ஏனென்றால், திமுகவினர் அமைச்சர் எ.வ.வேலு மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>அன்புமணி </p></div>
“நடிகரின் பின்னால் செல்லும் இளைஞர்கள் விரைவில் திருந்துவார்கள்” - முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in