உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்; 2 மாதமாகியும் திமுக அரசு செயல்படுத்தவில்லை: அன்புமணி குற்றச்சாட்டு

அன்புமணி

அன்புமணி

Updated on
1 min read

சென்னை: ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்து 2 மாதமாகியும், அதை செயல்படுத்த திமுக அரசு மறுக்கிறது’ என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற்றாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து 2 மாதங்களுக்கு மேலாகியும், அத்திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கதாகும்.

உண்மையில் உறுதியளிக் கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்பதே ஏமாற்று வேலைதான். அந்தத் திட்டத்தைக்கூட செயல்படுத்த திமுக அரசு மறுக்கிறது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது, அரசு வேலைகளை வழங்குவது, தனியார் நிறுவனங்களில் 75 சதவீத பணிகளை தமிழக இளைஞர்களுக்கு ஒதுக்கீடு போன்றவை நனவாகக் கூடியதிட்டங்கள்தான்.

இவற்றை கனவுதிட்டங்களாக மாற்றிய திமுக அரசு, மீண்டும் ஆட்சிக்கு வந்து 2030-ம் ஆண்டுக்குள் கனவு திட்டங்களை செயல்படுத்தப் போவதாக கூறுவது கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டத்துக்கு போவதாக கூறுவதற்கு ஒப்பானதாகும். தமிழக மக்களை சில நேரம் ஏமாற்ற முடியும். ஆனால், எல்லாநேரமும் ஏமாற்ற முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>அன்புமணி</p></div>
ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியா சாம்பியன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in