தேர்தலில் திமுகவை தமிழக விவசாயிகள் தூக்கி எறிய போகிறார்கள்: கடலூரில் அன்புமணி பேட்டி

தேர்தலில் திமுகவை தமிழக விவசாயிகள் தூக்கி எறிய போகிறார்கள்: கடலூரில் அன்புமணி பேட்டி
Updated on
2 min read

கடலூர்: தமிழக விவ​சா​யிகள், தேர்​தலில் திமுகவை தூக்கி எறிய போகிறார்​கள் என பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​தார்.

கடலூரில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய தாவது: திமுக​வுக்​கு, உண்​மை​யிலேயே விவ​சா​யிகள் மீது அக்​கறை இருந்​தால் ஏன் உரிய ஊக்​கத்​தொகை கொடுக்​க​வில்​லை.

ஒரு குவிண்​டால் நெல்லை உற்​பத்தி செய்​வதற்கு ரூ.2,450 ஆகிறது. தமிழக அரசுரூ.2,500 மட்​டுமே தரு​கிறது ஒரு குவிண்​டால் நெல்​லுக்கு ஒடிசா அரசு ஊக்​கத்​தொகை​யாக 800 ரூபாய் கொடுக்​கிறது. தெலங்​கானா அரசு 500 ரூபாய் கொடுக்​கிறது.

திமுகவை விவ​சா​யிகள் மன்​னிக்​கப் போவது கிடை​யாது. தமிழ்​நாட்​டில் உள்ள விவ​சா​யிகள் முடிவு செய்து விட்​டார்​கள் திமுகவை தூக்கி எறிய போகிறார்​கள்.

ஸ்டா​லின் அடுக்கி வரும் சாதனை​கள் எது​வும் மக்​களிடம் எடு​பட​வில்லை. அதனால் மத்​திய பாஜக அரசை விமர்​சனம் செய்து பேச தொடங்கி இருக்​கிறார். இது சட்​டப்​பேர​வைத் தேர்​தல். இங்கு திமுக, அதி​முக கூட்​டணி இடையே​தான் போட்​டி. இதை தெரிந்து அவர் பாஜகவைப் பற்றி பேசி திசை திருப்​பு​கிறார். இது தவிர பழனி​சாமி மீது தனி நபர் விமர்​சனத்தை வைக்​கிறார்.

கடலூர் மாவட்​டத்​தில் இரண்டு அமைச்​சர்​கள் இருக்​கிறார்​கள். இந்த மாவட்​டத்​தின் வளர்ச்​சிக்கு எது​வும் செய்​ய​வில்​லை. விவ​சா​யத்​துறை அமைச்​சர் எம்ஆர்கே பன்​னீர்​செல்​வம் விவ​சா​யிகளுக்கு நன்மை செய்​வதை விடுத்​து​விட்டு விவ​சாய நிலங்​களை பிடுங்கி நிறு​வனங்​களுக்கு கொடுக்​கக்​கூடிய புரோக்​க​ராக செயல்​பட்​டுக் கொண்​டிருக்​கிறார்.

போராட்​டத்​தில் ஈடு​படும் 200 பேரை அப்​புறப்​படுத்த ஆயிரம் போலீ​சாரை களத்​தில் இறக்​கு​கிறார்​கள். நிலங்​களை எல்​லாம் பன்​னாட்டு நிறு​வனங்​களிடம் கொடுத்​து​விட்டு சாப்​பாட்​டிற்கு என்ன செய்​யப் போகிறார்​கள்?

வள்​ளலார் சர்​வ​தேச மையம் வேண்​டும், அதில் மாற்று கருத்து இல்லை ஆனால் தற்​போது அமைக்​கத் திட்​ட​மிட்டு இருக்​கும் இடத்​தில் தேவை கிடை​யாது.

எப்​போது பார்த்​தா​லும் ‘பாஜக பாஜக’ என்று மத்​திய அரசை விமர்​சனம் செய்து கொண்டு என்ன செய்​யப் போகிறீர்​கள்.?

இபிஎஸ் முதலமைச்​சர் ஆனவுடன் மத்​திய அரசிடம் தேவை​யான நிதி​களை பெற்று தமிழ்​நாட்​டுக்கு தேவை​யான நன்​மை​களை செய்து கொடுப்​பார்.

இந்த ஐந்து ஆண்​டு​களில் திமுக அரசு 5 லட்​சம் கோடி கடன் வாங்கி இருக்​கிறது. இதில் மூலதனத்​திற்கு எவ்​வளவு செலவு செய்​துள்​ளார்​கள்?

இதை திமுக விளக்க வேண்​டும். ஒரு வார்த்​தையை கூட போதை ஒழிப்பை பற்றி இந்த தேர்​தலில் பேச​வில்​லை. இவர்​கள் கட்​சி​யின் நிறு​வனர் அண்​ணா மது ஒழிப்பை ஆதரித்​தார். இந்​தி​யா​விலேயே அதி​க​மான கல்​லீரல் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் தமிழ்​நாட்​டில்​தான் இருக்​கிறார்​கள். அதி​க​மான விதவை​கள் வாழும் மாநில​மாக தமிழ்​நாடு இருக்​கிறது.

திமுக​வின் கைக்​கூலிகள் ஆன துரோகி​கள்​தான், என்​னுடைய தந்தை ராம​தாசை இந்த நிலைக்கு வைத்துள்ளனர். அவரது உடல்​நிலை சரி​யில்​லாமல் போனதற்கு அவர்களே காரணம்.

என் தந்தை 100 வயது நன்​றாக இருக்க வேண்​டும். ஒரு மகனாக அவருக்கு என்​னென்ன செய்ய வேண்​டும் என்​பது எனக்கு தெரி​யும். அவருக்கு ‘வெர்​டிகோ’ பிரச்​சினை இருக்​கிறது.

நீண்ட நேரம் அமர்ந்து விட்டு எழுந்து நின்​றால் தலை சுற்​றல் வரும். தற்​போது அவர் நலமுடன் இருக்​கிறார். அவருக்கு வைத்​தி​யம் பார்க்​கும் மருத்​து​வர்​களிடம்​ தொடர்ந்​து பேசிக்​ கொண்​டு​தான்​ இருக்​கிறேன்​ என்​று தெரிவித்​தார்​.

தேர்தலில் திமுகவை தமிழக விவசாயிகள் தூக்கி எறிய போகிறார்கள்: கடலூரில் அன்புமணி பேட்டி
தமிழகம் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் ஆட்சியே காரணம்: டி.ராஜா கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in