திமுகவினரின் ஊழல்கள் தொடர்பாக 2 மாதங்களில் சிபிஐ விசாரணை: அன்புமணி கருத்து

மதுரை அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயிலில் அரிவாள் காணிக்கை செலுத்திய அன்புமணி.

மதுரை அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயிலில் அரிவாள் காணிக்கை செலுத்திய அன்புமணி.

Updated on
1 min read

மதுரை: மேற்​குத் தொடர்ச்சி மலையை நாசம் செய்​து, கேரளா​வுக்கு கனிம வளங்​களைக் கடத்​துகின்​றனர். திமுக​வினரின் ஊழல்கள் தொடர்​பாக 2 மாதங்​களில் சிபிஐ விசா​ரணை நடத்​தும் என்று பாமக தலை​வர் அன்​புமணி கூறி​னார்.

மதுரை அழகர்​கோ​வில் கள்​ளழகர் கோயி​லில் நேற்று பாமக தலை​வர் அன்​புமணி, அவரது மனைவி மற்​றும் குடும்​பத்​தினருடன் சுவாமி தரிசனம் செய்ய வந்​தார்.

சோலைமலை முரு​கன் கோயில், ராக்​காயி அம்​மன் கோயில், பதினெட்​டாம்​படி கருப்​பண​சாமி கோயி​லில் தரிசனம் செய்து அரி​வாளை காணிக்கையாக செலுத்​தினார்.

பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் 5 ஆண்​டு​கால திமுக​வின் ஊழல் நிறைந்த, நிர்​வாகத் திறனற்ற ஆட்சி மீது மக்​கள் கோபத்​தில் உள்​ளனர். இதனால் வரும் தேர்​தலில் அதி​முக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி வெற்றி பெறும்.

எங்​கள் கூட்​டணி பலமான, தெளி​வான கூட்​ட​ணி, ஆனால் திமுக கூட்​டணி குழப்​ப​மான கூட்​ட​ணி. எங்​கள் கூட்​டணி குறைந்​தது 200 தொகு​தி​களுக்கு மேல் வெற்​றி​பெறும். திமுக ஒற்றை இலக்​கத்​தில்​தான் வெற்றி பெறும்.

இளைஞர்​கள் மது, கஞ்​சா, ஊழல் இல்​லாத மாநிலம் வேண்​டுமென எதிர்​பார்க்​கின்​றனர். தென் மாவட்​டங்​களில் கனிமவள ஊழல் நடந்து கொண்​டிருக்​கிறது.

மேற்​குத் தொடர்ச்சி மலை இயற்​கை​யின் வரம். அந்த மலையை நாசப்​படுத்​தி, இயற்கை வளங்​களை அழித்து கேரளா​வுக்கு கனிம வளங்​களை கடத்​துகின்​றனர்.

நெடுஞ்​சாலைத் துறை அமைச்​சர் 14 கி.மீ. மேம்​பாலத்​துக்கு ரூ.2,500 கோடி திட்​டத்தை அறி​வித்​தார். அதில் ரூ.700 கோடி குறை​வாக ஒப்​பந்​தப்​புள்ளி கோரிய தமிழக ஒப்​பந்​த​தா​ரருக்கு பணி கிடைக்​க​வில்​லை.

ஆனால், அதி​கம் லஞ்​சம் கொடுத்த ஆந்​திர ஒப்​பந்​த​தா​ரருக்கு பணி​யைக் கொடுத்​துள்​ளனர். இப்​படி அனைத்து துறை​களி​லும் லஞ்​சம், ஊழல் நடந்து கொண்​டிருக்​கிறது. இன்​னும் 2 மாதங்​களில் ஆட்சி மாற்​றம் நிகழும். திமுக​வினரின் ஊழல்கள் தொடர்​பாக சிபிஐ விசா​ரணை நடத்​தும்.

சிறு​பான்​மை​யினரை வாக்கு வங்​கி​யாக மட்​டுமே திமுக பயன்​படுத்தி வரு​கிறது. நாங்​கள்​தான் பாது​காப்பு என்று கூறி அச்​சுறுத்​தலை ஏற்​படுத்​துகின்​றனர். இவ்​வாறு அவர் கூறி​னார். பின்​னர், மீனாட்சி அம்​மன் கோயி​லில், குடும்​பத்​தினருடன் அன்​புமணி சுவாமி தரிசனம் செய்​தார்.

<div class="paragraphs"><p>மதுரை அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயிலில் அரிவாள் காணிக்கை செலுத்திய அன்புமணி. </p></div>
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் மார்ச் 6-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in