அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: அன்புமணி கோரிக்கை

அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: அன்புமணி கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: அரசுப் பள்​ளி​களில் காலி​யாக​வுள்ள ஆசிரியர் பணி​யிடங்​களை உடனடி​யாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி கேட்​டுக்​கொண்​டுள்​ளார்.

இது தொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை: தமிழகத்​தில் பள்​ளிக்​கல்​வித் துறை​யின் கீழ் செயல்​பட்டு வரும் அரசுப் பள்​ளி​களில் 18,107 ஆசிரியர் பணி​யிடங்​கள் காலி​யாக உள்​ளன. இவ்​வளவு ஆசிரியர் பணி​யிடங்​கள் காலி​யாக இருப்​பது ஏழை குழந்​தைகளின் கல்​வியை கடுமை​யாகப் பாதிக்கும்.

மாணவர் சேர்க்கை வீழ்ச்சி

தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் கல்​வித்​தரம் நாளுக்கு நாள் குறைந்து வரு​வதற்கு காரணமே போதிய ஆசிரியர்​கள் நியமிக்​கப்​ப​டாதது​தான்.

இதனால் மாணவர் சேர்க்கை வேக​மாக வீழ்ச்சி அடைந்து வரு​கிறது. நடப்​பாண்​டில் கூட அரசுப் பள்​ளி​களில் 5 லட்​சம் மாணவர்​களை சேர்க்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டிருந்த நிலை​யில், இது​வரை ஒன்​றரை லட்​சம் புதிய மாணவ, மாணவி​களை சேர்க்க முடிய​வில்​லை.

சமூக மாற்​றத்​தை​யும், முன்​னேற்​றத்​தை​யும் ஏற்​படுத்​து​வதற்கு அரசுப் பள்​ளி​களால்​தான் முடி​யும். அந்த ஒற்றை இலக்கை அடைவதற்​காக​வாவது அரசுப் பள்​ளி​கள் வலிமை​யுடன் திகழ வேண்​டும்.

அதற்​காக அரசுப் பள்​ளி​களில் காலி​யாக இருக்​கும் ஆசிரியர் பணி​யிடங்​களை உடனடி​யாக நிரப்​புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும். அதன் மூலம் அரசுப் பள்​ளி​களில் மாணவர் சேர்க்​கையை உயர்த்த வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: அன்புமணி கோரிக்கை
இறால் பண்ணை, வேதித் தொழிற்சாலைகளில் அவசர ஆய்வு நடத்த வேண்டும்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in