பெரம்பூரில் விஜய் வெற்றி பெற்றால் தொகுதி மக்கள் பனையூருக்கு தான் செல்ல வேண்டும்: அன்புமணி விமர்சனம்

பெரம்பூரில் விஜய் வெற்றி பெற்றால் தொகுதி மக்கள் பனையூருக்கு தான் செல்ல வேண்டும்: அன்புமணி விமர்சனம்
Updated on
1 min read

சென்னை: பெரம்​பூர் தொகு​தி​யில் விஜய் வெற்றி பெற்​றால், மக்​கள் பனையூருக்கு செல்ல வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்புமணி தெரி​வித்​தார். அதி​முக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி இடம்​பெற்​றுள்ள பாமக சார்​பில் பெரம்​பூர் தொகு​தி​யில் வேட்​பாளர் தில​க​பா​மா, அதி​முக சார்​பில் ராயபுரம் தொகு​தி​யில் வேட்​பாளர் டி.ஜெயக்​கு​மார், துறை​முகம் தொகு​தி​யில் வேட்​பாளர் மனோ, ஆர்​.கே.நகர் தொகு​தி​யில் வேட்​பாளர் ஆர்​.எஸ்​.​ராஜேஷ், எழும்​பூர் தொகு​தி​யில் வேட்​பாளர் ஆர்​.அபிஷேக் மற்​றும் திருவிக நகர் தொகு​தி​யில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்​சி​யின் மாநில தலை​வர் பொற்​கொடி ஆம்​ஸ்ட்​ராங் ஆகியோர் போட்​டி​யிடு​கின்​றனர்.

அவர்​களை ஆதரித்து பாமக தலை​வர் அன்​புமணி பிரச்​சா​ரம் செய்​தார். அப்​போது, அன்​புமணி பேசி​ய​தாவது: விஜய​காந்த் கட்சி தொடங்கியதே திமுக​வுக்கு எதி​ராக தான். ஆனால், பிரேமலதா விஜய​காந்த், அவர்​களு​டன் சேர்ந்​துள்​ளார். விஜய​காந்​தின் ஆன்மா அவர்​களை மன்​னிக்​காது. திமுக கூட்​ட​ணி​யில் திரு​மாவளவன் 5 ஆண்​டு​களாக வாய் பேச முடி​யாமல் அசிங்​கப்​பட்​டுள்​ளார்.

திமுக கூட்​ட​ணி​யில் தேமு​தி​க​வுக்கு 10 தொகு​தி​களும், நீண்ட கால​மாக உள்ள விசிக​வுக்கு குறைந்த தொகு​தி​களும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன. தமிழகத்​தில் 5 ஆண்​டு​களில் ஒரு மருத்​துவக் கல்​லூரி கூட தொடங்​க​வில்​லை. அமைச்​சர்​கள் வியா​பாரி​களாக உள்​ளனர்.

முதல் வியா​பாரி எ.வ.வேலு. இரண்​டாவது வியா​பாரி சேகர்​பாபு, மூன்​றாவது வியா​பாரி செய்​தில் பாலாஜி, நான்​காவது வியா​பாரி கே.என்​.நேரு. பெரம்​பூர் தொகு​திக்கு தவெக தலை​வர் விஜய் வேனில் வரு​வார். வேனில் செல்​வார்.

தில​க​பாமா உங்​கள் வீட்டு வாசலில் இருப்​பார். அதே போன்று விஜய் வெற்றி பெற்​றால், நீங்​கள் பனையூர் வாசலுக்குச் செல்ல வேண்​டும். தில​க​பாமா உங்​கள் வீட்டு வாசலில் உங்​களு​டன் நிற்​பார். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

இதனை தொடர்ந்​து, அம்​பத்​தூர், மதுர​வாயல், மாதவரம், திரு​வள்​ளூர், பொன்​னேரி, கும்​மிடிப்​பூண்டி, ஆவடி, பூந்​தமல்லி ஆகிய தொகுதிகளிலும் அன்​புமணி பிரச்​சாரம்​ செய்​தார்​.

பெரம்பூரில் விஜய் வெற்றி பெற்றால் தொகுதி மக்கள் பனையூருக்கு தான் செல்ல வேண்டும்: அன்புமணி விமர்சனம்
தேர்தலில் ‘விஜய்’ நமக்குத்தான்: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சுவாரஸ்யம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in