அரசு மருத்துவமனையில் காயமடைந்தவருக்கு தையல் போட்ட தூய்மைப் பணியாளர்: அன்புமணி கண்டனம்

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

Updated on
1 min read

அரசு மருத்துவமனை ஒன்றில் விபத்தில் சிக்கிய ஒருவரின் காயத்திற்கு தூய்மைப் பணியாளர் தையல் போட்ட சம்பவத்துக்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராணிப்பேட்டை மாவட்டம் கலவை மருத்துவமனையில், விபத்தில் சிக்கிய ஒருவரின் காயத்திற்கு தூய்மைப் பணியாளர் தையல் போட்டதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.  தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள்  சீரழிவின் உச்சத்தை அடைந்து விட்டன என்பதற்கு இதை விட மோசமான சான்று இருக்க முடியாது.

அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளை மருத்துவர்களும், சிறிய காயங்களுக்கான சிகிச்சையை மருத்துவர்களின் வழிகாட்டுதலில் அதற்கான துணை மருத்துவப் பணியாளர்களும் தான் செய்ய வேண்டும் என்பது விதியாகும். அதை மீறி மருத்துவக் கருவிகளையும், மருந்துகளையும் கையாளும் உரிமையை தூய்மைப் பணியாளருக்கு வழங்கியது யார்?

நோயாளிக்கு தூய்மைப் பணியாளர் தையல் போட்டதை விட கொடுமையானது இது தொடர்பாக மருத்துவத் துறையின் மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள பதில் தான். மருத்துவர்களின் கண்காணிப்பில் தான் தூய்மைப் பணியாளர் தையல் போட்டதாகவும், அவர் சிறப்பாக சிகிச்சை அளித்ததாகவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் நலனில் மருத்துவத்துறையினர் விருப்பம் போல விளையாடக் கூடாது. இந்த நிகழ்வு தொடர்பாக விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>அன்புமணி ராமதாஸ்</p></div>
‘பராசக்தி’ ட்ரெய்லர் எப்படி? - ‘கூஸ்பம்ப்ஸ்’ வசனங்கள், அனல் பறக்கும் ஆக்‌ஷன்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in