என்னை பாமக தலைவராக்கிய அடுத்த நாளே ஜி.கே.மணி சூழ்ச்சியை தொடங்கிவிட்டார்: அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாமகவின் ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் மாநகராட்சி பகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் நேற்று நடந்தது.

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாமகவின் ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் மாநகராட்சி பகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் நேற்று நடந்தது.

Updated on
1 min read

சென்னை: ‘என்னை பாமக தலை​வ​ராக்​கிய அடுத்த நாளில் இருந்தே கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி சூழ்ச்​சியை தொடங்கி விட்​டார். ராம​தாஸை சுற்றி திமுக கைக்​கூலிகள், துரோகி​கள் உள்​ளனர்’ என்று அன்​புமணி குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

சென்னை அடுத்த மாமல்​லபுரத்​தில் உள்ள தனி​யார் விடு​தி​யில் பாமக​வின் ஒன்​றிய, நகர, பேரூர் மற்​றும் மாநக​ராட்சி பகுதி நிர்​வாகி​கள் ஆலோ​சனைக்கூட்​டம், அக்​கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி தலை​மை​யில் நேற்று நடந்​தது.

அதில் அவர் பேசிய​தாவது: திமுக சூழ்ச்சி செய்து வன்​னியர்​களை​யும், பட்​டியலின மக்​களை​யும் ஒன்​றுசேர விடா​மல் பார்த்து கொள்​கிறது. சில திமுக கைக்​கூலிகள், துரோகி​கள் தற்​போது ராம​தாஸை சுற்றி கொண்​டிருக்​கிறார்​கள். தைலாபுரத்தை திமுக டேக்​ஓவர் செய்​துவிட்​டது.

அவர்​களை ஒரு​போதும் நான் மன்​னிக்க மாட்​டேன். இன்​னும் மூன்று மாதத்​தில் யார் யார் சிறைக்​குச் செல்ல போகிறார்​கள் என்​பது உங்​களுக்​குத் தெரிய​வரும். அப்​பா, பிள்ளை உறவு என்னை பாமக தலை​வ​ராக்​கிய அடுத்த நாளில் இருந்தே ஜி.கே.மணி சூழ்ச்​சியை தொடங்கிவிட்டார்.

அப்​பா, பிள்ளை உறவை பிரித்​தது அவர்​தான். என்​னைப் பற்றி தவறான விஷ​யங்களை எல்​லாம் சொல்லி, ராம​தாஸுக்​கும் எனக்​கும் பகையை உரு​வாக்​கியது ஜி.கே.மணி​தான். டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் அவர்​கள் தரப்பு தோற்​று​விட்​டது.

ஆனால் வெற்றி பெற்​ற​தாக ராம​தாஸிடம் தவறான தகவல்​களை சொல்​லி, அவரை ஏமாற்றி வரு​கிறார்​கள். இவர்​களுக்கு பின்​னால் இருப்​பதும் திமுக​தான்.பொய்​களை நம்ப வேண்​டாம் யார் யாரிடம் எவ்​வளவு பணம் வாங்கி இருக்​கிறார்​கள் என்ற அனைத்து விவரங்​களும் என்​னிடம் இருக்​கிறது.

அருள், ஜி.கே.மணி போன்​றோர் செய்​யும் பொய்​களை பாமக​வினர் நம்ப வேண்​டாம். பாமக​வும், கட்​சி​யின் சின்​ன​மும் நம்​மிடம்​தான் உள்​ளது. சட்​டரீ​தி​யாக​வும், கட்சி விதி​களின்​படி​யும் பாமக நம்​மிடம்​தான் உள்​ளது. அதற்​கான அனைத்து ஆதா​ரங்​களும் என்னிடம் உள்​ளன.

அவர்​கள் உரிமை​யியல் நீதி​மன்​றத்​துக்​குச் சென்​றால் வழக்கு 7 ஆண்​டு​கள் வரை கூட நடக்​கும். நீங்​கள் தெளி​வாக இருந்​து, களத்​தில் இறங்கி பாடு​படுங்​கள். இவ்​வாறு தெரி​வித்​தார்​.

<div class="paragraphs"><p>சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாமகவின் ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் மாநகராட்சி பகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் நேற்று நடந்தது.</p></div>
2-வது கட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம்: சென்னையில் டிச.12-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in