குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் திமுக ஆட்சியில் சுதந்திரமாக சுற்றுகின்றனர்: அன்புமணி குற்றச்சாட்டு

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் திமுக ஆட்சியில் சுதந்திரமாக சுற்றுகின்றனர்: அன்புமணி குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: ‘குற்​றச் செயல்​களில் ஈடு​பட்​ட​வர்​கள் அனை​வரும் எந்​தக் கட்​டுப்​பாடும் இல்​லாமல் திமுக ஆட்​சி​யில் சுதந்​திர​மாக சுற்றி வரு​கின்​றனர்’ என்று பாமக தலை​வர் அன்​புமணி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

இது தொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தூத்​துக்​குடி மாவட்​டம் விளாத்​தி​குளத்தை அடுத்த வேடநத்​தத்​தில் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்​கொடுமைக்கு உள்​ளாக்​கப்​பட்டு படு​கொலை செய்​யப்​பட்ட வழக்​கில், ஏற்​கெனவே ஜாமீனில் வெளியே வந்த ஒரு கொடூரனை காவல்​துறை​யினர் கைது செய்​துள்​ளனர்.

மன்​னிக்​கவே முடி​யாத குற்ற செயல்​களில் ஈடு​பட்​ட​வர்​கள் அனை​வரும் எந்த கட்​டுப்​பாடும் இல்​லாமல் சுதந்​திர​மாக சுற்றி வரு​கின்​றனர். அவர்​களை கண்​காணிக்​கவோ, அவர்​கள் மீண்​டும் குற்​றச் செயல்​களில் ஈடு​படு​வதைத் தடுக்​கவோ காவல்​துறை எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை.

சாப விமோசனம்

தமிழகத்​தின் சட்​டம் - ஒழுங்கு சூழல் சந்தி சிரிக்​கிறது. தமிழகத்​தின் சாபக்​கேடு என்​றால் அது தற்​போது நடை​பெற்று வரும் திமுக ஆட்சி தான்.

தமிழகத்​துக்​கான சாப விமோசனம் ஏப்​.23-ம் தேதி நடை​பெறவுள்ள சட்​டப்​பேரவை தேர்​தல்​தான்.

அந்த தேர்​தலில் பாமக, அதி​முக மற்​றும் கூட்​டணி கட்​சிகளுக்கு மக்​கள் வாக்​களிப்​ப​தன் மூலம் தமிழகத்​துக்கு சாப விமோசனம் கிடைக்​கும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் திமுக ஆட்சியில் சுதந்திரமாக சுற்றுகின்றனர்: அன்புமணி குற்றச்சாட்டு
திமுக அரசின் சாதனைகள் குறித்து இடைவிடாது பிரச்சாரம் செய்ய தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in