“முதல்வர் ஸ்டாலினுக்கு ஆட்சி நடத்த தெரியவில்லை” - அன்புமணி குற்றச்சாட்டு

“முதல்வர் ஸ்டாலினுக்கு ஆட்சி நடத்த தெரியவில்லை” - அன்புமணி குற்றச்சாட்டு
Updated on
1 min read

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இடம்பெற்றுள்ள அமமுக சார்பில் சைதாப்பேட்டை தொகுதியில் ஜி.செந்தமிழன், அதிமுக சார்பில் தி.நகர் தொகுதியில் சத்யா, அதிமுக சார்பில் விருகம் பாக்கம் தொகுதியில் விருகை வி.என்.ரவி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: பெரியார், அண்ணா, கருணாநிதியிடம் இருந்த சமூக நீதி, முதல்வர் ஸ்டாலினிடம் இல்லை. தி.நகர் மேம்பாலத்துக்கு திமுகவின் மாவட்ட செயலாளர் அன்பழன் பெயரை வைத்துள்ளனர். அவர் என்ன மகாத்மா காந்தியை விடவும் நாட்டுக்காக உழைத்தவரா, தியாகியா ?

மின் கட்டண உயர்வு: திமுக ஆட்சி செய்த கடந்த 5 ஆண்டுகளில் 4 முறை மின் கட்டணம் உயர்ந்துள்ளது ஏற்கெனவே இருந்த மின் கட்டணத்தை விட 56 சதவீத மின் கட்டணம் அதிகப்படுத்தியுள்ளனர். மின் கட்டண உயர்வால் தமிழகத்தில் எத்தனையோ தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள்ளனர். எவ்வாறு ஆட்சி நடத்துவது என்று ஸ்டாலினுக்கு வேலைவாய்ப்பை இழந்துள் தெரியவில்லை.

ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள். கிராம அலுவலர்கள் போராட்டம் நடக்கிறது. அவர்களை ஸ்டாலின் ஏமாற்றி விட்டதால், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது அனைவரும் ஸ்டாலினுக்கு பாடம் புகட்டுவார்கள். மூன்று பெண் குழந்தைகளை பெற்ற தந்தையாக சொல்கிறேன், இப்படிப்பட்ட ஒரு சூழலில் தமிழகம் இருந்தது கிடையாது. திமுக ஆட்சியில் வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறிக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் தினமும் பாலியல் வன்கொடுமை நடக்கிறது. திமுக அரசு, படிப்பதற்கு வழிவகையை செய்யாமல் குடிப்பதற்கு வழிவகை செய்கிறது. பள்ளியில் படிப்பதற்கு ஒரு ஆசிரியர். ஆனால் டாஸ்மாக்கில் குடிப்பதற்கு ஐந்து ஊழியர்கள். இதுதான் திமுக, அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் அனைத்து போதை பொருட்களும் தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் கிடைக்கிறது.

தமிழகத்தில் மது, போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தினால் பெண்களுக்கான பாதுகாப்பும், சட்டம் ஒழுங்கும் நன்றாக இருக்கும். ஆனால், திமுகவின் தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மது விலக்கு குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை. அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும். தமிழகத்தில் போதை பொருட் களை ஒழிப்பதற்கு தனி பிரிவு உருவாக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வாக்குறுதி கொடுத்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

“முதல்வர் ஸ்டாலினுக்கு ஆட்சி நடத்த தெரியவில்லை” - அன்புமணி குற்றச்சாட்டு
மேற்கு ஆசியப் போரால் கடும் விலை உயர்வு: பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் பதுக்கலை தடுக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in