மேற்கு ஆசியப் போரால் கடும் விலை உயர்வு: பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் பதுக்கலை தடுக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

மேற்கு ஆசியப் போரால் கடும் விலை உயர்வு: பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் பதுக்கலை தடுக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
Updated on
1 min read

பிளாஸ்டிக் மூலப் பொருட்களின் விலை உயர்வு, பதுக்கல், கள்ளச்சந்தை விற்பனை ஆகியவற்றைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கத் தலைவர் ஜி.சங்கரன் கூறியதாவது: தமிழகம். புதுச்சேரியில் பிளாஸ்டிக் தொழிலை நம்பி ஏராளமான தொழில் முனைவோர் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த சூழலில், மேற்கு ஆசியப் போர் காரணமாக பிளாஸ்டிக் மூலப் பொருள் விநியோகத்தில் கடும் சிக்கல் உருவாகியுள்ளது.

போர் தொடங்கிய உடனேயே பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் பதுக்கி வைக்கப் பட்டுள்ளதால், கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கிடையே, வணிகர்கள் டன் கணக்கில் மூலப் பொருட்களை வாங்கி செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்தி சந்தையில் விலையை உயர்த்துகின்றனர். இதனால், பிப்.28-ம் தேதி ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்ட மூலப் பொருட்களின் விலை தற்போது ரூ.170 ஆக அதிகரித்துள்ளது.

கள்ள சந்தை விற்பனை தடுக்க...: இந்த பிரச்சினைகளுக்கு தீர்வாகவும், கள்ள சந்தை விற்பனையைத் தடுக்கவும் பெரிய உற்பத்தி நிறுவனங்கள் வணிகர்களுக்கு மொத்தமாக மூலப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. அங்கீகரிக்கப்பட்ட ஸ்டாக் கிஸ்ட்கள் மூலம் தயாரிப்பு நிறுவனங் களுக்கு நேரடியாக மட்டுமே மூலப் பொருட்களை வழங்க வேண்டும்.

இறக்குமதிப் பொருட்களுக்கு இணையாக உள்நாட்டு பிளாஸ்டிக் மூலப்பொருள் உற்பத்தியாளர்களும் விலைக் குறைப்பு செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல்போல பிளாஸ்டிக் மூலப் பொருட்களுக்கும் விலை கட்டுப்பாட்டு முறையை கொண்டுவந்து, அரசு அனுமதியின்றி உற்பத்தி நிறுவனங்கள் மூலப்பொருள் விலையை மாற்றக் கூடாது என மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேற்கு ஆசியப் போரால் கடும் விலை உயர்வு: பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் பதுக்கலை தடுக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
Chiraiya: மனைவியின் பெட் ரூம் ‘NO’ உரிமை பேசும் கமலேஷ் | திரை தேவதைகள் 12

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in