புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் 342 மையங்களுக்கு விருது: அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் 342 மையங்களுக்கு விருது: அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்
Updated on
1 min read

சென்னை: பு​திய பாரத எழுத்தறிவுத் திட்​டத்​தில் சிறப்​பாக செயல்​பட்ட 342 மையங்​களுக்கு அமைச்​சர் அன்​பில் மகேஸ் சிறப்பு விருதுகள் வழங்கி கவுர​வித்​தார்.

நாடு முழு​வதும் கல்வி கற்​காத 15 வயதுக்கு மேற்​பட்​ட​வர்​களுக்கு தன்​னார்​வலர்​களை கொண்டு அடிப்​படை எழுத்தறிவு பயிற்​று​ விப்​ப​தற்​காக மத்​திய அரசால் ‘பு​திய பாரத எழுத்தறிவுத் திட்​டம்’, 2022-ம் ஆண்டு அறி​முகம் செய்​யப்​பட்​டது.

இந்த திட்​டத்​தின்​கீழ் 2027-ம் ஆண்​டுக்​குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்​பிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் பள்​ளி​சாரா மற்​றும் வயது வந்​தோர் கல்வி இயக்​குநரகத்​தின் மூலம் இந்த திட்​டத்​தின்​கீழ் முதல் 3 ஆண்​டு​களில் சுமார் 15 லட்​சம் பேருக்கு அடிப்​படை எழுத்தறிவு கல்வி வழங்​கப்​பட்​டது.

இதைத் தொடர்ந்து 2025-26-ல் முதல்​கட்​ட​மாக 5 லட்​சத்து 37,876 பேருக்கு அடிப்​படை எழுத்தறிவுத் தேர்வு நடத்​தப்​பட்டு சான்​றிதழ் வழங்​கப்​பட்​டது. 2-ம் கட்​ட​மாக 9 லட்​சத்து 63,169 பேருக்கு 39,250 கற்​போர் எழுத்தறிவு மையங்​களில் கற்​பித்​தல் செயல்​பாடு​கள் நடத்​தப்​பட்​டு, அவர்​களுக்​கும் கடந்த டிசம்​பர் மாதம் தேர்வு நடத்​தப்​பட்​டது.

இந்த திட்​டத்​தில் சிறப்​பாக செயல்​பட்ட 342 மையங்​களை அடையாளம் கண்​டு, அவர்​களுக்கு மாநில எழுத்தறிவு விருதை பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி வழங்​கி​னார். இந்​நிகழ்ச்​சி​யில் பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்​.

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் 342 மையங்களுக்கு விருது: அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்
மாமூல் தர மறுத்த பெண்ணை கைது செய்ய வைத்த விவகாரம்: தனிப்படை போலீஸார் 3 பேர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in