பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழப்பு: அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழப்பு: அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி
Updated on
1 min read

திருச்சி: பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யா மொழி திருச்​சி​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறியதாவது: இந்​தி​யா​விலேயே தமிழகத்​தில்​தான் தொடக்​கப் பள்​ளி​களில் இடைநிற்​றல் பூஜ்ய​மாக உள்​ளது.

இந்​திய அளவில் உயர்​நிலை மற்​றும் மேல்​நிலைப் பள்​ளி​களில் இடைநிற்​றல் 14 சதவீத​மாக உள்ள நிலை​யில், தமிழகத்​தில் 7.7 சதவீத​மாக உள்​ளது. அதை​யும் குறைக்க நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

தற்​போதைய தகவல் தொழில்​நுட்ப உலகில், எந்த அமைச்​சரும் தவறான, பொய்​யான தகவல்​களை போகிற​போக்​கில் சொல்​லி​விட்டு போய்​விட முடி​யாது.

திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் அரசுப் பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவர் உயி​ரிழந்த சம்​பவம் மிக​வும் வேதனை அளிக்​கிறது. இது தொடர்​பாக முதல்​வர் என்​னிடம் 3 முறை பேசி​னார். 2014-15-ம் ஆண்டு நபார்டு நிதி​யில் அந்​தப் பள்​ளி​யின் சுவர் கட்​டப்​பட்​டது.

இந்த விவ​காரத்​தில் அலட்​சி​ய​மாக யார் செயல்​பட்டு இருந்​தா​லும், அவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும். இது தொடர்​பாக வழக்கு பதிவு செய்​யப்​பட்​டு, விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

விபத்​தில் உயி​ரிழந்த மாணவனின் குடும்​பத்​துக்கு பக்​கபல​மாக இருப்​போம். அவரது சகோ​தரரின் கல்விக்​குத் தேவை​யான அனைத்​தை​யும் செய்து கொடுக்​கத் தயா​ராக உள்​ளோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழப்பு: அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி
குடிமக்களைப் பாதுகாப்பது அரசுகளின் உயரிய கடமை: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in