

சென்னை: பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
2014-15 முதல் 2020-21-ம் ஆண்டு வரை பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்ட விவரங்களை இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை கோரியுள்ளது. இதையடுத்து அந்த ஆண்டுகளில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்ட நாள் மற்றும் அவை பள்ளிகளுக்கு விநியோகிக் கப்பட்ட நாள் ஆகிய விவரங்களை இயக்குநரகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
அதேபோல், தகுதியான எந்தவொரு மாணவராவது விடுபட்டிருந்தால் அதன் விவரத்தையும் தர வேண்டும்.